பிக் பாஸ் 8: “நீ செம கேடி”.. “உன்ன தமிழ்நாடு கொண்டாடும்”.. எலிமினேஷனுக்கு பின் போட்டியாளர்களை ரிவ்யூ செய்த Fatman..

By Ajith V

Published:

Fatman Ravinder Review on Contestants : பிக் பாஸ் எட்டாவது சீசனின் முதல் வாரம் மிக அசத்தலாக முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்லலாம். முதல் ஐந்து நாட்கள் சற்று மந்தமாகவும், அதே நேரத்தில் விறுவிறுப்பு கலந்தும் போய்க்கொண்டிருந்த நிலையில் தான் விஜய் சேதுபதி என்ட்ரி இந்த நிகழ்ச்சியை அப்படியே வேற லெவலில் தூக்கி நிறுத்தி இருந்தது. அவர் மிக தைரியமாக அனைத்து போட்டியாளர்களையும் எதிர்கொண்துடன் மட்டுமில்லாமல் நெத்தியடி பதிலையும் தெரிவித்து அனைவரையும் ஆப் செய்து விடுகிறார்.

இதனிடையே, இந்த வார இறுதியில் பேட்மேன் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். மிகச் சிறந்த போட்டியாளராக இருந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டில் அரங்கேறவும் காரணமாக இருந்தவர் தான் ரவீந்தர். ஆனாலும் அவர் வெளியேறியிருந்தது அதிக பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் வரும் நாட்களில் நிகழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற விறுவிறுப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான் வெளியே வந்த ரவீந்தரிடம் அனைத்து போட்டியாளர்களையும் ரிவ்யூ செய்யும்படி விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டார். அவர் முந்தை ஏழு சீசன்களிலும் அனைத்துப் போட்டியார்கள் பற்றி ரிவ்யூ செய்த அனுபவமுள்ள நிலையில் இந்த முறையும் அப்படி அனைத்து பேரையும் பற்றி பேசி இருந்தார் ரவீந்தர்.

அர்னவ் நீ பக்கா ஃபேக். ஒழுங்கா விளையாடு. தீபக், நீங்க வந்து முன்னாடி சண்டை போடுங்க, பின்னாடி போடாதீங்க. முன்னாடி பேசுங்க, பின்னாடி பேசாதீங்க. முதல்ல கேமராவை தாண்டி உங்க மனசுன்ற கேமராவுக்கு நியாயமா இருக்க பாருங்க. அதே மாதிரி அருண் நீ வந்து ரொம்ப அப்பாவி எல்லாம் இல்ல. உனக்கு எல்லாமே தெரியும் ஆனா தெரியாத மாதிரி ஆடாத. நீ கண்டிப்பா செமையா ஆடக்கூடிய ஆள்.

தொடர்ந்து சுனிதாவுக்கு அறிவுரை கொடுத்த பேட்மேன் ரவீந்தர், “இந்த வீட்டில் நான் நம்புகின்ற நேர்மையான போட்டியாளர் நீ. நிச்சயமா தமிழ்நாடு உன்னை கொண்டாடும்” எனக்கூறியதும் அரங்கத்தில் இருந்த அனைவருமே ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டனர். இதே போல தர்ஷிகா பற்றி பேசிய ரவீந்தர், “நீ சரியான கேடி. ஆனா எல்லா கேம்லையும் சூப்பரா சண்டை போடுற. சாச்னா நீ தேவைப்படுற இடத்துல மட்டும் பேசு இல்லன்னா பேசாத” என கூறினார்.

இதே போலவே விஷாலின் சமையல் சுமாராக இருந்தது என மிக ஜாலியாக பேசினார் ரவீந்தர். மேலும் ஜெஃப்ரிக்கு அறிவுரை கொடுத்த ரவீந்தர், வாய், வார்த்தையை நீ சரியாக பயன்படுத்தினால் இந்த நிகழ்ச்சி உன் வாழ்க்கையை மாற்றி விடும்’ என்றும் கூறினார். மேலும் தர்ஷா குப்தாவை ஃபேக் என கூறிய ரவீந்தர், ஜாக்குலினை இந்த வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவர் என்றும் ஆனந்தி நல்ல மனிதர் என்றும் அதே நேரத்தில் பயந்து பயந்து ஒதுங்கி இருப்பதற்கு பதிலாக தைரியமாக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.