Bigg Boss Tamil Season 8ல் மூன்றாவது நாளான இன்று தொடங்கியதும் பிக் பாஸ் ஆண்கள் வீட்டில் இருந்து ஆண்கள் ஒருவர் பெண்கள் இடத்திற்கும் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் இடத்திற்கும் வரவேண்டும் என்று டிஸ்கஷன் செய்ய சொல்லி சொல்கிறார் பிக் பாஸ். பெண்கள் அணியில் இதனால் சண்டை வருகிறது.
ஒருவர் ஜாக்குலின் சென்றால் நன்றாக இருக்கும் அவர் போல்டாக சமாளிப்பார் என்று கூறுகிறார். மற்றொருவர் தர்ஷாவையும் பவித்ராவையும் கூறுகின்றனர். தர்ஷிகா பவித்ரா நல்ல ஆடுவா அப்படி என்று சொல்கிறார். உடனே உங்க பிரண்டுன்னு சப்போர்ட் பண்றீங்களா அப்படின்னு தர்ஷா கேட்கிறார். அடுத்ததாக சுனிதாவிற்கும் ஜாக்குலினுக்கும் வாய் வார்த்தையை முட்டுகிறது. சுனிதா நீங்க உங்களுக்காக மட்டும் பார்க்காதீங்க நம்ம டீமுக்கு எது நல்லதுன்னு அதை மட்டும் யோசிங்க என்று கூறுகிறார். உடனே பிறகு ஓட்டு வைத்து பவித்ராவை ஆண்கள் வீட்டுக்கு அனுப்புகின்றனர்.
மறுபக்கம் ஆண்களிடத்தில் மிகுந்த ஒற்றுமை இருக்கிறது. எல்லோருமே ஒற்றுமையாக கலந்துரையாடி முத்துக்குமாரை பெண்கள் இடத்துக்கு அனுப்புகிறார்கள். அடுத்ததாக இந்த வார ஷாப்பிங் டாஸ்க் நடைபெறுகிறது. புதிய விதிகளை பிக் பாஸ் அனுப்புகிறார்.
யார் யார் என்ன செய்ய வேண்டும் ஆண்கள் இடத்திற்கு பெண்கள் எப்படி வரவேண்டும் பெண்களிடத்திற்கு ஆண்கள் எப்படி வரவேண்டும் தலைவருக்கு என்ன பவர் இருக்கிறது என்பதை எல்லாம் கலந்துரையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஜாக்குலின் அழுகிறார். நான் பேசுவது எல்லாம் பெருசா எடுத்துட்டு இப்படி எல்லாம் பண்றாங்கன்னு அழுகிறார்.
ஆனால் ஜாக்லின் வந்த நாளிலிருந்து நாட்டாமைத்தனம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வது தான் என்பது போல பேசுகிறார் போலிருக்கிறது. ஆனால் ஆண்கள் அணியில் நல்ல ஒற்றுமை இருக்கிறது. அனைவரும் ஒற்றுமையாக விட்டுக் கொடுத்து விளையாடுகிறார்கள். இது முதல் வாரம் என்பதனால் அப்படி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. போகப்போக இந்த நிலைமை கூட மாறலாம்.