Bigg Boss 8 Tamil Day 2: வந்த மறுநாளே வெளியேறிய சாச்சனா… தலைவரான தர்ஷிகா…

By Meena

Published:

Bigg Boss தமிழ் சீசன் 8 ல் இரண்டாவது நாளான இன்று காலை பாடலுடன் ஆட்டத்துடன் தொடங்கியது. பின்னர் வீட்டில் நடுவே கோடு கிழிக்கப்பட்டதால் எந்த ஏரியாவை யார் எப்படி உபயோகப்படுத்துவது போன்ற கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கிறது.

பின்னர் 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் என்று பிக்பாஸ் கூறியதால் யாரை வெளியேற்றலாம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஜாக்குலின் யாரிடமும் ஒத்துப் போகாமல் ஒரு மாற்று கருத்து உடனே இருக்கிறார். ஜெப்ரேவின் கானா பாடல் அருமையாக இருந்தது. பின்னர் ஒவ்வொருவரும் தான் ஏன் 24 மணி நேரத்திற்குள் இந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று அவர்கள் அவர்களுக்காக வாதாடினர்.

இதில் சாச்சானா மட்டும் பெண்களில் ஒருவர் வெளியேற வேண்டும் என்று கூறினால் நான் வெளியிட தயார் என்ற வார்த்தையை கூறுகிறார். இதுவே அவருக்கு ட்ராபேக்காக ஆகிப் போனது. யார் வெளியேற வேண்டும் என்று நாமினேஷன் செய்த போது ந்த ஒரு காரணத்தை கூறி அனைவரும் சாச்சனாவையே நாமனேட் செய்தனர். கிடைத்த வாய்ப்பை எளிதாக விட்டுத் தருகிறேன் என்று சாச்சனா கூறுவது சரியில்லை என்று காரணம் கூறி நாமினேட் செய்தார்கள்.

பிக்பாஸை பொருத்தவரை யாருடா தன்னால் வந்து ஒப்புக்கொள்வார் என்று காத்திருப்பது போல் ஒருவர் யாரையாவது நாமினேட் செய்துவிட்டால் தொடர்ந்து அதையே மாறி மாறி பின்பற்றுவது நடக்கும். அதேதான் இன்றும் நடந்திருக்கிறது. இதன் விளைவாக அதிக ஓட்டு சாச்சனா பெற்றதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டது பார்ப்பதற்கு சற்று வருத்தமாக இருந்தது. கண்ணீருடன் தனது கனவுகள் சிதைந்தை நினைத்து வெளியேறினார் சாச்சனா.

அதற்கு அடுத்தபடியாக அனைவரும் சேர்ந்து ஜாக்குலினை தான் அவர் யாரிடம் ஒத்துப் போக மாட்டேன் என்கிறார் மாற்று கருத்துடன் இருக்கிறார். ந்த முதல் நாளே அவரால் சற்று நிம்மதி இல்லாமல் போனது எனது அனைவரும் அவரை குற்றம் சாட்ட தொடங்கிவிட்டனர். ஜாக்குலினுக்கு இனி வரும் நாட்களில் வீட்டில் எதிர்ப்பு வரும் என்பது போல் தான் தெரிகிறது. ஏனென்றால் எளிதாக அக்சப்ட் பண்ணாமல் எதிர் கேள்வி வைப்பவராக இருக்கிறார். அன்சிதாவிற்காக அர்வ் ஒவ்வொருவரிடமும் அவரைப் பற்றி எனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல நடந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் இன்று கொஞ்சம் பேச்சு பொருளாக ஆனது.

அடுத்ததாக தலைவர் போட்டிக்காக கார்டன் ஏரியாவில் பெண்கள் வெர்சஸ் ஆண்கள் எதிரெதிரே அமர்ந்து ஓடி யார் நாற்காலியில் இடம் பிடிப்பது போல ஒரு போட்டியை நடத்தினர். இதில் பெண்கள் அணியில் இருந்து தர்ஷிகா வென்று பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக மாறினார். அதற்கு அடுத்ததாக எலிமினேஷன் பிராசஸ் தொடங்கியது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற நாமினேட் ஆகியிருக்கும் நபர்கள் ஜாக்குலின், முத்துக்குமார், ரவீந்தர், ரஞ்சித், அருண் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கம்போல் பலர் கேமரா இருப்பதை உணர்ந்து பார்த்து பார்த்து பேசுவதாக தெரிகிறது. இனி போக போக அனைவரின் சுயரூபம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.