தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ். இவர் தாஜ்மகால் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வீடு திரும்பிய நிலையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 48. இவர் தாஜ்மகால், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம், மகாநடிகன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் அவரது காதலி நந்தனாவை 2006ல் திருமணம் செய்தார். கடைசியாக அப்பாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வந்தார். இந்த நிலையில் பாரதிராஜாவின் மகனான மனோஜ் இறந்தது திரை உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சமீபத்தில் தான் பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை இறந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அவரது மறைவுக்கு திரையுலகினரும், அவரது ரசிகர்களும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். பாரதிராஜாவுக்கு மனோஜ், ஜனனி என இரு பிள்ளைகள். இப்போது ஒரே மகனான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.