பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் ரஜினியை ஒரு சிறிய கேரக்டரில் பயன்படுத்திய நிலையில், அதற்கு பின்னர் அவர் ரஜினியை ஹீரோவாக வைத்து இயக்கிய ஒரே படம் தான் ‘கொடி பறக்குது’. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய நிலையில், பாரதிராஜா இயக்கத்தில் உருவான ஒரே மசாலா படம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது.
பாரதிராஜா படம் என்றாலே கிராமங்கள், வலிமையான கேரக்டர்கள், உணர்வுபூர்வமான குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள், அசத்தலான ரொமான்ஸ் காட்சிகள், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும். ஆனால் ‘கொடி பறக்குது’ திரைப்படத்தை அதிரடி ஆக்சன் படமாக ரஜினியை வைத்து அவர் இயக்கினார்.
ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

இந்த படம் உருவான காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலா நாயகியாக நடித்தார். மேலும் மணிவண்ணன், சுஜாதா, ஜனகராஜ், சங்கிலி முருகன் உள்ளிட்டோரும் நடித்தனர். இந்த படத்தின்போது பாரதிராஜாக்கும் இளையராஜாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனை அடுத்து அம்சலேகா இந்த படத்துக்கு இசையமைத்தார்.
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய ரஜினியின் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகிய நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியும் பாரதிராஜாவும் இணைகிறார்கள் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்றும் கூறப்பட்டது.
ரஜினி 2 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தார். ரஜினி தனது ரசிகர்களுக்காகவே இந்த படத்தில் நடித்ததாக தோன்றும். அதேபோல் அம்மா மகன் சென்டிமென்ட் காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும்.

ஒரே ஒரு மசாலா படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பாரதிராஜா இந்த படத்தை எடுத்தபோதிலும், இந்த படம் ரஜினி ரசிகர்களை ஓரளவு திருப்தி செய்தாலும் இந்த படம் நடுநிலை ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இயக்குனர் பாரதிராஜாவின் ஸ்டைல் இதில் சுத்தமாக இல்லை என்றும் ஒரு சராசரி மசாலா படத்தை அவர் இயக்கியுள்ளார் என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!
பாரதிராஜா மசாலா படம் எடுக்க கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை, ஆனால் ஒரு மசாலா படத்தில் என்னென்ன அம்சங்கள் தேவை என்பதை பாரதிராஜா தெரிந்து கொண்டு அதன் பிறகு மசாலா படத்தை எடுத்திருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன.
ரஜினி தனது ரசிகர்களை இந்த படத்தின் மூலம் ஏமாற்றவில்லை என்றாலும் பாரதிராஜாக்காக படம் பார்க்க வந்தவர்கள் பெரும் ஏமாற்றத்தை பெற்றனர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஓரளவுக்கு ஹிட்டாகின. குறிப்பாக ‘ஓ காதல் என்னை காதலிக்கவில்லை’ என்ற பாடல் நல்ல வரவேற்பு பெற்றது. ‘அன்னை மடியில்’ என்ற இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை வாங்கிய விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது.
முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!
இந்த படத்தின் தோல்வியை அடுத்து பேட்டியளித்த பாரதிராஜா, ‘ரஜினியை வைத்து இப்படித்தான் என்னால் படம் எடுக்க முடியும்’ என்று கூறியதும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘இனிமேல் ரஜினியை வைத்து படமெடுக்க மாட்டேன்’ என பாரதிராஜா கூறியதாகவும், அதனையடுத்து அவர் ரஜினி பக்கம் செல்லவே இல்லை என்றும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
