நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் படங்கள் என்றாலே அந்தக் காலத்தில் சக்கை போடு போட்டன. அவரை திரைக்கதை மன்னன்னு சொல்வாங்க. அந்த அளவு அவரது படங்களில் ஒரு யதார்த்தம், ஒரு உணர்ச்சின்னு எல்லாமே கலந்து இருக்கும். படம் பார்க்கும் ரசிகனுக்கு எங்காவது ஒரு இடத்தில் இது நம்ம வாழ்க்கையிலும் நடந்துருக்கே என்ற ஒரு உணர்வு வர வேண்டும். அப்போதுதான் அவன் படத்துடன் மிங்கிள் ஆவான் என்ற சூத்திரம் தெரிந்தவர் பாக்கியராஜ்.
ரசிகனின் நாடித்துடிப்பை உணர்ந்து படம் இயக்குவதில் வல்லவர் தான் கே.பாக்கியராஜ். இவர் இயக்கிய முதல் படமே அப்படிப்பட்டதுதான். சுவரில்லாத சித்திரங்கள். அருமையான கதை, திரைக்கதை. அந்த வகையில் இவரது முந்தானை முடிச்சு படம் காலத்திற்கும் பேசக்கூடிய வகையில் இருக்கிறது. இவர் இன்னைக்கு உள்ள சினிமா எப்படி இருக்கு என்ற கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க….
மனசுல எங்காவது ‘டச்’ பண்ற மாதிரி சீன் இருக்கணும். வாழ்க்கையோட பிரதிபலிப்புதான் சினிமா. உணர்ச்சி பூர்வமா இருக்கணும். அடுத்தடுத்து இதுதான்னு இப்பல்லாம் ஜனங்க ஈசியா யூகிச்சிடுறாங்க. அவங்க ரொம்ப புத்திசாலியா ஆகிட்டாங்க. அதனால நாம அதை மனசுல வச்சிக்கிட்டு சினிமா எடுக்கணும். தன்னம்பிக்கையோட படம் எடுத்தா யாரு வேணாலும் ஜெயிக்கலாம். இந்த ஆண்டுக்குள்ள படம் டைரக்ஷன் பண்றேன்.
பாக்கியராஜ் சொன்னதுல கடைசியாக லப்பர் பந்து, குடும்பஸ்தன் படங்கள்ல அந்த உணர்வுப்பூர்வமான மேட்டர் இருந்தது என்கிறார் பாக்கியராஜ். கோடி கோடியா செலவழிச்சி படம் எடுக்குறாங்க. ஆனா அதுக்கு 2வது நாள்லயே ரிசல்ட் தெரிஞ்சிடுது. படத்துல பிரமாதமா சாங், லொகேஷன், கேரக்டர், காமெடி எல்லாம் இருக்கு. ஆனா உணர்வுப்பூர்வம் மிஸ் ஆகிடுது. அதுதான் வருத்தமா இருக்கு. சினிமாவுல ‘ஐ லவ் யூ’ சொல்றது ஈசி. ரியல் லைஃப்ல கஷ்டம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

