பாகுபலி ஹீரோயின் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட பயில்வான்! தேவையா இந்த வேலை…

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை அனுஷ்காவிற்கு திருமணமாக வாய்ப்பே இல்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் , தெலுங்கு திரையுலகில் முன்னணி…

happy birthday anushka shetty from archery to dialogues devasena left a lasting impression on all in the baahubali movies 001

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை அனுஷ்காவிற்கு திருமணமாக வாய்ப்பே இல்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் , தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் அனுஷ்கா தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்து ரெண்டு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.தமிழில் முன்னணி நடிகையான இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

கோலிவுட்டில் நடிப்பின் உச்சத்திற்கு சென்று அனுஷ்காவிற்கு ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் அதற்கு பிறகு இஞ்சி இடுப்பழகி என்று திரைப்படத்தின் மூலம் அனுஷ்காவின் கேரியர் சரியத் துடங்கியது.

அந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்த அனுஷ்காவால் பின் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதன் காரணமாக அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கினர். தற்போது அவர் கைவசம் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது

இந்நிலையில் அனுஷ்காவிற்கு வயது 40 கடந்துவிட்ட போதிலும் அவர் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொடர்ந்து ஜெயிலர் பாடலை புகழ்ந்து தள்ளிய அஜித்! காரணம் என்ன தெரியுமா…

அதில் திருமணம் வரை சென்று நடிகர் பிரபாஸ் அனுஷ்காவை விட்டு பிரிந்து சென்றதிற்கு காரணம் அவர் தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததுதான் என்று கூறியுள்ளார். மேலும் அனுஷ்காவிற்கு உடல் எடை அதிகரித்ததாலும் அவர் ஆறு அடிக்கு மேல் இருப்பதாலும் தான் அவருக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

தேவசேனாவாக அரியணை ஏறிய அனுஷ்காவிற்கு இனி திருமண மேடை ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பயில்வான் கூறுகிறார்.