படப்பிடிப்பில் அவமானப்படுத்திய நடிகை! பல வருடங்கள் கழித்து பழிவாங்கிய எம்ஜிஆர்!

By Velmurugan

Published:

புகழ்மிக்க மனிதரின் மிகப்பெரிய சாதனைக்கு பின்னால் பல அவமானங்களும், எதிர்மறையான கருத்துக்களும் தான் குவிந்திருக்கும். அதை முறியடிக்கும் விதத்தில் விடாமுயற்சியுடன் போராடி மிகப்பெரிய உச்சத்தை தொட்டு பிரபலமாக வலம் வந்த நடிகர்களில் ஒருவர் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர். பல திரைப்படங்களில் ஹீரோவாக மட்டும் நடித்து வந்த எம்ஜிஆர் நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். எம்ஜிஆர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் நாடோடி மன்னன். இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது எம்ஜிஆர் ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் பலமுறை எடுத்து வந்துள்ளார்.

பொதுவாக ஒரு காட்சி திருப்தியாக அமையாத பட்சத்தில் பலமுறை எடுக்கப்படுவது வழக்கம். மேலும் எம்ஜிஆர் இன் முதல் படம் என்பதால் அந்த படத்தின் மீது அவர் கொண்டிருந்த அதிக கவனம் அந்த காட்சியை முழு திருப்தியாக எடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஒரே காட்சி பலமுறை எடுத்து வந்ததால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த பானுமதிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. அப்போது என்ன வேலை செய்து கொண்டிருக்க மிஸ்டர் ராமச்சந்திரன் என்ற ஒரே ஒரு குரல் மட்டும் சத்தமாக கேட்கிறது, வேறு யாருமில்லை கதாநாயகி பானுமதி குரல் தான் அது. படத்தின் மொத்த யூனிட்டும் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருக்க சத்தமாக ஒரு குரலை கேட்டு திரும்பினார் மக்கள் திலகம் எம்ஜிஆர். வியப்புடன் திரும்பிய எம்ஜிஆர் பானுமதியிடம் என்னமா என நலம் விசாரித்தார்.

அதற்கு பானுமதி எத்தனை முறை தான் ஒரு காட்சியை எடுப்பீர்கள். இவ்வளவு நேரம் சொல்ல வேண்டாம் என நினைத்திருந்தேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என உங்களுக்கே புரியவில்லை. நீங்கள் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் எல்லோரும் உங்களை சகித்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். நீங்கள் அதை சாதகமாக மாற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் என்னால் அப்படி சகித்துக் கொள்ள முடியாது. இந்த படத்தை நீங்கள் மற்றொரு இயக்குனரிடம் கொடுத்து எடுக்க முயற்சி செய்யுங்கள், நானே இந்த படத்தில் மீண்டும் நடிக்கிறேன். ஆனால் இன்று என்னால் நடிக்க முடியாது எனக்கு மனசு சரியில்லை என பானுமதி அனைவரின் முன் எம்ஜிஆர் இடம் குரல் உயர்த்தி பேசிவிட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து வேகமாக விரைந்து சென்றுள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் முகம் சுளிக்க வைத்த கவிஞர் வாலி! படப்பிடிப்பில் நடந்த கலவரம்!

இந்த செயலின் மூலம் எம்ஜிஆர் கோபம் கொள்ளவில்லை. அமைதியாக சிந்தித்து இதற்கான மாற்று வழியை கண்டுபிடித்தார். உடனே பானுமதியின் கதாபாத்திரத்தை படத்தில் பாதியிலேயே இறந்து போவது போல மாற்றிவிட்டு அதற்கு பதிலாக சரோஜாதேவியை கதாநாயகியாக களமிறக்கினார். அதன் பின் படத்தை மிகச் சிறப்பாக எடுத்து மாபெரும் வெற்றி படமாகவும் மாற்றினார் எம்ஜிஆர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக மாறியது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் 45 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டிருந்தது. தமிழ் சினிமாவில் இதுவரை உருவான திரைப்படங்களிலேயே அதிக நேரம் ஓடும் திரைப்படம் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படம் தான். இதுவரை அந்த படத்தோட சாதனையை வேறு எந்த திரைப்படமும் முறியடித்தது இல்லை.

இதற்கடுத்து எம்.ஜி.ஆர் பானுமதியை பழிவாங்கிய சம்பவமும் நடந்துள்ளது. நாடோடி மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளுக்கு கழித்து எம்ஜிஆர் தமிழக முதல்வராக மாறினார். அந்த நேரத்தில் தமிழக அரசு இசைக்கல்லூரியின் முதல்வராக யாரை நியமிக்கலாம் என பல விவாதங்கள் நடந்து வந்தது. ஆலோசனை குழுவும் அதற்காக பல முயற்சிகளை எடுத்து பலரின் பெயரை கூற அத்தனையும் மறுத்துவிட்டு எம்ஜிஆர் ஒரு பெயரை எழுதுகிறார். அது வேறு யாரும் அல்ல நடிகை பானுமதி. அதன் பின் பானுமதிக்கு கலைமாமணி விருதையும் வழங்கி கௌரவித்தார் எம்ஜிஆர். புகழ்பெற்ற நடிகராக இருந்த போதும் தன்னை அவமானப்படுத்திய மற்றொரு நடிகைக்கு விருது வழங்கும் பெரிய மனது மக்கள் திலகம் எம்ஜிஆர்க்கு இருந்துள்ளது.