மக்கள் திலகம் எம்ஜிஆர் முகம் சுளிக்க வைத்த கவிஞர் வாலி! படப்பிடிப்பில் நடந்த கலவரம்!

புரட்சிப்பித்தன் என்னும் டைட்டிலை பார்த்ததும் இது எம்ஜிஆர் படத்தின் டைட்டில் என்பது நமக்கு புரியும். இந்த படத்தை கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் சகோதரர் எம் எஸ் திரவியம் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குனருமான டி ஆர் ராமண்ணா இருவரும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. கன்னட திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் சில காட்சிகளும் படமாக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை கவிஞர் வாலி எழுதுவதாக இருந்தது. 1975 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று பத்திரிகை விளம்பரமும் வந்தது.

ஆனால் அதற்கிடையில் அரசியலில் எம்ஜிஆர் பிசியாக மாறி தேர்தல் நடந்து ஆட்சியைப் பிடித்து முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்றார். அதன் பின் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்த போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த கதைப்படி எம்.ஜி.ஆர் ஒரு விஷயத்திற்காக வேண்டும் என்று மனநலம் பாதிக்கப்பட்டவரை போல நடிக்க வேண்டும். ஒரு நாள் படப்பிடிப்பின் போது இயக்குனர் ராமண்ணாவின் ஆலோசனைப்படி அன்று எடுக்க இருக்கும் காட்சி பற்றி எம்ஜிஆர் இடம் சென்று விளக்கினார் வாலி. அதைக் கேட்டுக்கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் எம்ஜிஆர். அந்த காட்சியில் கோவிலுக்கு காரில் வந்து இறங்கி கதாநாயகி சாமி கும்பிடுகிறார். அவர் கண்களை மூடி வணங்கும் போது பின்னாடி மனநிலை சரியில்லாதவர் போல நடிக்கும் எம்ஜிஆர் நடிகையின் தலையில் சூடி இருக்கும் மல்லிகை பூவை பிடித்து சாப்பிட வேண்டும்.

அதன்படியே எம்ஜிஆர் மல்லிகை பூவை பிடித்து இழுத்து தின்றார். எல்லாருக்கும் எம்ஜிஆர் நடித்த விதம் திருப்தியாக அமைந்தது மேலும் காட்சியும் ஓகே ஆனது. ஆனால் கவிஞர் வாலி மட்டும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தார். எல்லாரையும் கவனித்த எம்ஜிஆர் கவிஞர் வாலியையும் கவனித்தார். உடனே வாலியிடம் உங்களுக்கு காட்சி திருப்தியாக அமையவில்லையா என கேட்டார். அதற்கு கவிஞர் வாலியும் ஆமாம். நீங்கள் மனநலம் சரியில்லாதவனை போல இன்னும் சற்று வேகமாக முடியை இழுத்து மல்லிகை பூவை பிரித்து சாப்பிட்டு இருக்க வேண்டும் என கூறினார். வாலியின் கருத்தைக் கேட்டு சற்று கோபமடைந்த எம்ஜிஆர் வேகமாக செய்து இருக்கலாம் ஆனால் மல்லிகைப்பூ சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக இருந்தது என வெறுப்பான ஒரு பதிலை கூறிவிட்டு வேகமாக சென்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வியந்து பாராட்டிய முன்னணி பிரபல நடிகை! வாய்ப்புக்காக காத்திருந்த ஹீரோக்கள்!

எம்ஜிஆரின் இந்த பதிலை கேட்டதும் சற்று மிரண்டு போன வாலி மனதிற்குள் தைரியத்தை வரவழைத்து எம்ஜிஆர் இருக்கும் இடத்திற்கு சென்று மன்னிப்பு கேட்க விரைந்தார். அப்பொழுது புன்னகையுடன் கவிஞர் வாலியை வரவேற்ற எம்.ஜி.ஆர் உங்களைப் போன்று நண்பர் தான் வேண்டும். நண்பர்கள் எப்பொழுதும் நம்முடன் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல நம்மிடம் இருக்கும் குறைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கும் தான். அந்த வகையில் நீங்கள் என் சிறந்த நண்பர் எனக்கூறி பாராட்டினார்.

அதன் பின் கவிஞர் வாலி கூறியபடி படப்பிடிப்பு நடந்தது ஆனால் அது சின்ன மாற்றம் ஏற்பட்டிருந்தது. கதாநாயகியின் தலையில் மல்லிகை பூவிற்கு பதிலாக ரோஜா பூ மாறியது. அதை நடிகர் எம் ஜி ஆர் மிக வேகமாக பிடித்து இழுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்து வேகமாக சாப்பிட்டார். இப்பொழுது இந்த காட்சி அனைவருக்கும் முழு திருப்தியை கொடுத்தது. மக்கள் திலகம் எம்ஜிஆர் மிகப்பெரிய நடிகராக இருந்த போதிலும் தன்னுடைய நடிப்பை பிறர் குறை கூறுவதை பெரிது படுத்தாமல் அதில் உள்ள கருத்துக்களை எடுத்துக் கொண்டு தன் நடிப்பில் சில மாற்றங்கள் செய்து அனைவருக்கும் திருப்திப்படுத்தும் வகையில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.