நடிகர் திலகம் சிவாஜியை நேரில் சந்தித்து கதை சொல்லிய பாலா! அந்த சிங்கத்திடம் பட்ட பாடு என்ன?

By Velmurugan

Published:

இயக்குனர் பாலா இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் சேது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருப்பார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைவரின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவதாக இயக்குனர் பாலா இயக்கிய திரைப்படம் தான் நந்தா. இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த படத்தில் பெரியவர் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜியை நடிக்க வைக்க இயக்குனர் பாலா மிகவும் ஆசைப்பட்டுள்ளார். அதற்காக நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து கதையும் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயக்குனர் பாலாவிடம் நடிகர் திலகம் சிவாஜி இப்பொழுது உயிரோடு இருந்தால் அவரை வைத்து படம் இயக்கும் ஆசை உங்களுக்கு இருக்கா என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பாலா அவர் உயிரோடு இருந்தவரை எனக்கு அந்த ஆசை இருந்தது நந்தா படத்தில் பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜி நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்காக சிவாஜி இடம் நேரில் சந்தித்து கதையும் கூறினேன். அப்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் சிறப்பாக அந்த பேட்டியில் கூறியிருந்தார். அன்னை இல்லத்திலிருந்து கதை சொல்ல வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே இயக்குனர் பாலாவும் சிவாஜியின் அன்னை இல்லத்திற்கு கிளம்பி சென்றுள்ளார். அப்பொழுது மிகப்பெரிய ஹால் ஒன்றில் நடிகர்கள் திலகம் சிவாஜி சிங்கம்போல தனியாக அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த பாலாவிற்கு சில நேரங்கள் உடல் முழுக்க சிலிர்ப்பு ஏற்பட்டது.

உடனே நடிகர் திலகம் பாலாவை உட்காரு அப்பு எனக் கூறியுள்ளார். அதற்கு பாலா வேண்டாம் ஐயா என மறுத்துள்ளார். உடனே சிவாஜியும் உட்காருவதற்கு தான் சோபா வாங்கி வைத்துள்ளேன். நீங்கள் உட்கார்ந்தால் அதற்கும் மதிப்பு தானே என கூறி பாலாவை அமர வைத்துள்ளார். அதன் பின் இயக்குனர் பாலாவை பார்த்து என்ன சாப்பிடுறீங்க காபியா டீ யா என சிவாஜி கேட்டுள்ளார். நம்ம வீட்டில் இரண்டும் சிறப்பாக இருக்கும் என இயல்பாக கூறியுள்ளார். இயக்குனர் பாலா இருக்கும் இடத்திற்கு டீ கப் ஒன்று வந்தது. அதை எடுத்த பாலாவின் கை பரதம் ஆடத் தொடங்கியது அதை கவனித்த நடிகர் திலகம் பாலாவை பார்த்து தம்பி உங்களுக்கு எந்த ஊரு என கேள்வி கேட்டார். அதற்கு பாலா நாராயணன் தேவன் பட்டி எனக் கூறியுள்ளார்.

அடுத்து சிவாஜி பாலாவிடம் என்ன படம் இயக்கியுள்ளார் என கேள்வி கேட்டார் அதற்கு பாலாவும் சேது என ஒரு படம் இயக்கியுள்ளேன் எனக் கூறியுள்ளார். இதை அடுத்து பாலாவிடம் சொல்லுங்க டைரக்டர் சார் என்ன கதை சொல்ல வந்திருக்கீங்க அப்படின்னு சிவாஜி கேட்டார். உடனே பாலா நந்தா அப்படின்னு ஒரு படம் பண்றதா இருக்கேன், அதில் பெரியவர் கதாபாத்திரத்தில் தாங்கள் நடிக்க வேண்டும். சேதுபதியான ராஜ வம்சத்தை சேர்ந்த அந்த பெரியவரிடம் ஓர் அனாதை பையன் வந்து செல்கிறான். இந்த இருவருக்கும் இடையே அப்பா மகன் போன்ற அன்பான உறவு இருக்கும். இதற்கிடையில் அந்த இளைஞன் ஊரில் நடக்கும் தப்புகளை தட்டிக் கேட்கிறான். அதற்கு எதிரி கும்பல் உங்களை பழிவாங்கும் விதமாக கொலை செய்து விடுகிறார் இதுதான் படத்தின் கதை என பாலா கூறினார்.

கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிகப்பெரிய ஆசை?

இந்த கதையை கேட்டதும் நடிகர் திலகம் சிவாஜி நான் முடிவெடுத்த பின் செய்தி அனுப்புகிறேன் எனக் கூறி ஒரு புன்னகையுடன் பாலாவை வழி அனுப்பி வைத்தார். வெளியே வந்த பாலாவிற்கு கொஞ்சம் கூட பதட்டம் குறையவில்லை. அந்த அளவிற்கு சிவாஜியை பார்த்த குறிப்பு பாலாவின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது நடிகர் திலகம் சிவாஜிக்கு கூறிய அந்த கதை தான் நந்தா அந்த படத்தில் நடிகர் திலகம் உடல்நிலை குறைவின் காரணமாக நடிக்க முடியாமல் போனது. அதற்கு பதிலாக அந்த படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரன் நடித்து சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.