கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிகப்பெரிய ஆசை?

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த ஒரே நடிகர் சிவாஜி அவர்கள் தான். அவரின் நடிப்பு திறமைக்கும், கம்பீரத்திற்கும், தமிழ் வசனங்கள் உச்சரிப்பிற்கும், உணர்ச்சி பூர்வமான முக பாவனைகளை யாராலும் ஈடு கொடுக்க முடியாது அந்த அளவில் மிகச்சிறந்த நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிக்காட்டி இருப்பார் நடிகர் சிவாஜி.தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பழமொழி படங்களிலும் சிவாஜி நடித்துள்ளார். சிவாஜி 275 தமிழ் திரைப்படங்களிலும், 9 தெலுங்கு திரைப்படங்களிலும், 2 இந்தி திரைப்படங்களிலும், 2 மலையாளத் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் 50, 60களில் ஹீரோவாக கொடி கட்டி பறந்த சிவாஜி அதன் பின் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் வயது முதிர்ச்சியின் காரணமாக படங்களில் நடிப்பதிலிருந்து சற்று ஓய்வு பெற்றிருந்தார். படங்களில் நடிப்பில் இருந்து விலகி சற்று ஓய்வு பெற்றிருந்த காலங்களில் சிவாஜி காலையில் எழுந்து குளித்து நீராடி வெண்மை நிற ஆடை உடுத்தி நெற்றி நிறைய திருநீறு பூசி பொன்னியின் செல்வன் நாவலை படிக்க தொடங்கி விடுவார்.

நடிகர் திலகம் சிவாஜியை பார்த்துக்கொண்ட மருத்துவர் சிவாஜியுடன் பேசிய பொக்கிஷத்தின் நினைவுகளை பதிவிட்டுள்ளார் இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அப்போது அந்த மருத்துவர் சிவாஜி இடம் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வந்தால் நீங்கள் பெரிய பழுவேற்றியவராக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சிவாஜி முகம் நிறைந்த சிரிப்புடன் ஏன் எனக்கு வயதாகிவிட்டது என்று கூறுகிறாயா என கிண்டல் செய்துள்ளார். அதற்கு அந்த மருத்துவர் அப்படி இல்லை நவரசத்தையும் முகத்தில் காட்ட வேண்டிய கதாபாத்திரம் பெரிய பழுவேற்றயர் கதாபாத்திரம் அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று விளக்கம் கொடுத்தார். அதற்கு சிவாஜி அந்த நாவலை யார் படமாக எடுப்பது என் நண்பர்கள் எல்லாம் மறைந்து விட்டார் என்று கூறினார் அப்பொழுது அவர் குரலில் ஒரு விரக்தியும் சோகமும் தெரிந்தது.

சில நாட்கள் கழிந்த ஒய் எம் சி ஏ அரங்கில் பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற போவதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த செய்தியை அறிந்த சிவாஜி இந்த நாடகத்தை யார் நடத்தப் போகிறார் என்று ஆர்வமாக கேட்டார். அவர் குரலில் ஆர்வமும் நாடகத்தின் மீதான காதலும் இருந்ததை மருத்துவர் புரிந்து கொண்டார். மேஜிக் லண்டன் என்று அமைப்பு நடத்துவதாக மருத்துவர் கூறவும் நானும் வருகிறேன் என்று சிவாஜி மருத்துவரிடம் கூறினார்.

சிவாஜியின் உடல்நிலை கருதி அவருக்கு பொன்னின் செல்வன் நாடகத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. நாடகம் திறந்த வெளி அரங்கில் நடப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருக்கும் புழுதி ஏற்படும் அது உங்கள் நுரையீரலுக்கு மிகவும் ஆகாது. நீங்கள் கட்டபொம்மன் நாடகம் நடத்தும் பொழுது நீங்கள் இளம் வயது இளைஞன். ஆனால் இப்போது அப்படி இல்லை என சொன்னதும் சிவாஜியின் முகம் மாறிவிட்டது. ஆனால் டாக்டர் சொல்வதை நடிகர் திலகம் ஒருபோதும் தட்ட மாட்டார். அதனால் அந்த நாடகத்திற்கு அவர் கலந்து கொள்ளவில்லை.

நீங்கள் சென்று அந்த நாடகத்தை பார்த்து வந்து எனக்கு கதை கூறும்படி மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார். அதன்பின் சிவாஜி நான் பொன்னியின் செல்வன் நாவலை 12 முறைகளுக்கு மேல் படித்து விட்டேன், ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பிற்காக விமானத்தில் செல்லும் பொழுதெல்லாம் பொன்னின் செல்வன் நாவலும் என்னுடன் பயணித்துள்ளது. என் சோழ நாடு, எழுதியவர் சோழன், நானும் சோழ நாட்டுக்காரன் பெருமை எங்களுடையது என சிவாஜி கூற அந்த கனத்து குரல் மண்ணை நேசித்த பங்கை என்னால் மறக்க முடியவில்லை என்று மருத்துவர் கூறினார்.

கேமியாவாக நடிக்க ஒப்புக்கொண்டு ஹீரோவாக நடித்த ரஜினி! 25 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு!

நடிகர் திலகம் சிவாஜியும் மறையவில்லை, கல்கியும் மறையவில்லை. சோழ நாட்டில் மீண்டும் எங்காவது பிறந்திருப்பார்கள். மேதைகளை போற்றும் நாட்டில் மேதைகள் என்றும் மறைவதில்லை. மீண்டும் பொன்னியின் செல்வன் அரங்கேறியது. நான்கு மணி நேரம் மியூசிக் அகாடமி அரங்கத்தில் நாடகம் அரங்கேறியது.முன் ஒய் எம் சி ஏ அரங்கில் பொன்னின் செல்வன் நாடகம் அரங்கேறிய போது காத்திருந்த கதையைக் கேட்க காத்திருந்த சிவாஜி தற்போது மியூசிக் அகாடமியில் நாடகம் நடைபெறும் பொழுது காத்திருக்கவில்லை அவர் மறைந்துவிட்டார். பொன்னியின் செல்வன் கதையை நாடகமாக பார்க்க வேண்டும் என்ற ஆசை இறுதிவரை சிவாஜிக்கு நிறைவேறாமலே சென்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews