சமூக வலைதளமான முகநூலில் பிரபலமாக இருந்தவர் கிஷோர் கே ஸ்வாமி. முன்பு அதிமுகவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார். இவர் இடும் ஸ்டேட்டஸ்களால் ஏதாவது சர்ச்சைகள் வெடித்துக்கொண்டே இருக்கும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெவின் தீவிர ஆதரவாளரான இவர் இவர் அவர் மறைவுக்கு பின்னர் அவ்வளவாக தெரியவில்லை.
இருப்பினும் தொடர்ந்து ஏதாவது கருத்துக்களை எழுதிக்கொண்டே வருவார். இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்தி டபேசியதாக கடந்த ஜூன் மாதம் பெண் பத்திரிக்கையாளர் சங்கத்தால் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பிணை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதி அவரை பிணையில் விடுதலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

