
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பது நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து இன்று இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோனி வர்கீஸ் என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்தோணி வர்கீஸ் ‘Angamaly Diaries’ என்ற மலையால படத்தில் அறிமுகமாகி அதன்பின் ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது