பிக் பாஸ் 8: எலிமினேட் ஆன நேரத்தில் முத்துக்குமரனை ஜாக்குலினிடம் சிக்க வைத்த அர்னவ்..

Arnav, Jacquline and Muthukumaran : தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது வாரம் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு எலிமினேஷன் நடைபெறுவது வழக்கமான ஒன்று…

arnav about muthukumaran and jaculine

Arnav, Jacquline and Muthukumaran : தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது வாரம் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு எலிமினேஷன் நடைபெறுவது வழக்கமான ஒன்று என்பதால் முதல் வார இறுதியில் பேட்மேன் ரவீந்திர் வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேறி இருந்தார்.

சீரியல் நடிகரான அர்னவ் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே மிக துணிச்சலான ஒருவராக இருந்தாலும் உள்ளே அவரது ஆட்டத்தை சரியாக ஆடவில்லை என்பது தான் பலரின் விமர்சனமாக இருந்தது. ஒரு சில இடங்களில் தன்னை பெரிய ஆளாக காண்பிக்க நினைத்த அர்னவ் அந்த இடத்தில் பல்பு வாங்கி இருந்த சம்பவங்கள் தான் அதிகமாக அரங்கேறி இருந்தது.

அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே அர்னவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக அவர் மீது விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்னவின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மிகச் சிறப்பாக அர்னவ் ஆடுவதாகவும் அனைவரிடமும் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டதாகவும் உள்ளே பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள் தொடங்கி பார்வையாளர்கள் வரைக்கும் தெரிவித்து வந்தனர்.

ஆண்கள் அணியை பொருத்தவரையில் முத்துக்குமரனைத் தவிர மற்ற அனைவரும் ஓரளவுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் குழுவாக தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் அர்வும் ஒரு தனி ரகம் போல பெரும்பாலான நேரத்தில் தனியாளாக தான் செயல்பட்டிருந்தார். இதன் பெயரிலேயே அதிக அளவில் நாமினேட் செய்யப்பட்டிருந்த அர்னவ், இரண்டாவது வார இறுதியில் வெளியேறி இருந்தார்.

இதனிடையே பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பின்னர், ஆண்கள் அணியை பற்றி அர்னவ் சொன்ன சில விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் அறிவுரை கொடுத்து வந்த அர்னவ், முத்துக்குமரனை பற்றி பேசும்போது, “முத்து. நீங்க ஜாக்குலின் பத்தி ஒரு விஷயம் பேசி இருந்தீங்க. எப்பவும் அவளை நாமினேஷன் வெச்சு பயமுறுத்தணும் அப்படினு. அதுல கூட எனக்கு சில விஷயங்கள் உடன்பாடில்லை. டீமுக்கு கொஞ்சம் விசுவாசமா இருக்கனும்னு கொஞ்சம் கெடுதல் பண்ணேன். ஆனா, நீங்க இனி அந்த தப்பை பண்ணாதீங்கஎன கூறுகிறார்.

ஜாக்குலின் பெண்கள் அணியில் தனித்து தெரிவதால் அவரை அடிக்கடி நாமினேஷன் செய்வதற்காக முத்துகுமன் போட்ட கேம் பிளான் பற்றி அர்னவ் அனைத்தையும் அம்பலப்படுத்தினார். அவர் அப்படி வெளிப்படையாக சொன்னதும் அதிர்ச்சியுடன் முத்துக்குமரனை பார்க்கிறார் ஜாக்குலின். இதனால் இந்த வாரத்தில் முத்துக்குமரனை எதிர்த்து ஜாக்குலின் ஏதாவது கேம் ஆடுவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.