Bigg Boss Tamil Season 8 : டாப் 5 குள்ள வந்துருவியா.. சர்வ சாதாரணமாய் அர்னவ் கேட்ட கேள்வி.. சவுந்தர்யாவின் மாஸ் பதில்..

Arnav and Soundariya : பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போதைய 95 நாட்களை கடந்துள்ள சூழலில் இதுவரை தகுதி பெற்ற எட்டு pபோட்டியாளர்களைத் தாண்டி ஏற்கனவே வெளியேறிய எட்டு பேரும் இருந்து வருகின்றனர். தர்ஷா…

Arnav and Soundariya

Arnav and Soundariya : பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போதைய 95 நாட்களை கடந்துள்ள சூழலில் இதுவரை தகுதி பெற்ற எட்டு pபோட்டியாளர்களைத் தாண்டி ஏற்கனவே வெளியேறி எட்டு பேரும் இருந்து வருகின்றனர். தர்ஷா குப்தா, பேட்மேன் ரவீந்தர், சாச்சனா, வர்ஷினி, ரியா, சுனிதா, அர்னவ், சிவகுமார் என பழைய போட்டியாளர்கள் மீண்டும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து வரும் சூழலில் வெளியே நடக்கும் பல்வேறு விஷயங்களையும் அவர்கள் போட்டியாளர்களிடம் பகிர்ந்து வருகின்றனர்.

முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், தீபக் என மொத்தம் எட்டு போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சூழலில் இந்த வாரத்திற்கு நடுவே கூட எலிமினேஷன் இருக்கலாம் என கருதப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்து விடும் என்பதால் அதுவரையிலும் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொண்டு ஃபைனலுக்கு முன்னேறி விட வேண்டும் என்பதும் பலரின் இலக்காக உள்ளது.

டைட்டில் வின்னர் வாய்ப்பு

இந்த வாய்ப்பை இன்னும் பலப்படுத்துவதற்காக வெளியே இருந்து வந்தவர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் தங்களது கேம் ப்ளானை நிறைய பேர் மாற்றிக் கொண்டு வருகின்றனர். மேலும் முத்து, ஜாக்குலின், சௌந்தர்யா, தீபக் என பலரும் டைட்டில் வின்னர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தற்போது ஒரு டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்களாக இருக்கும் எட்டு பேரும் வீட்டிற்குள் மீண்டும் விருந்தினர்களாக வந்த போட்டியாளர்கள் எட்டு பேரும் ஒவ்வொரு திரைப்படங்களின் கதாபாத்திரத்தை எடுத்து அதைப் போன்றே வீட்டிற்குள் வலம் வந்த வண்ணம் உள்ளனர்.

டாப் 5 ?

ஒரு பக்கம் ஜாலியாக நிறைய போட்டிகள் சென்றாலும் இன்னொரு புறம் யார் அடுத்தடுத்த நாட்களில் லிமினேட் ஆகாமல் யார் தொடர்வார் என்பதும் பரபரப்பை தான் ஏற்படுத்தி உள்ளது. அப்படி ஒரு சூழலில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வேகத்தில் சில போட்டியாளர்களை தரக்குறைவாக பேசி அனைத்து போட்டியாளர்களையும் கொந்தளிக்கும் வகையில் மாற்றி இருந்தார் அர்னவ்.
Soundariya and Arnav

இதனிடையே தான் தற்போது சவுந்தர்யாவிடம் பேசிக் கொண்டிருக்கும் அர்னவ், “டாப் 5 வந்துடுவேன்னு நம்பிக்கை இருக்கா?” என கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் சவுந்தர்யா, “டாப் 5 ?. நான் ஜெயிச்சுடுவேன்னே எனக்கு நம்பிக்கை இருக்குஎன தெரிவிக்கிறார். இதன் பின்னர் அருகே இருக்கும் சாச்சனா, “அச்சமில்லை அச்சமில்லைஎன சவுந்தர்யாவை பற்றி பாடுகிறார்.

அப்போது பேசும் சவுந்தர்யா, “அறம் செய்யறது பத்தி இங்க தெரிஞ்சு இருக்கணுமோ. அதெல்லாம் எனக்கு தெரியாதுஎன தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.