பிக் பாஸ் 8: இதெல்லாம் நமக்கு தேவையா கோபி.. வெளிய போயும் வன்மத்தை கக்கிய அர்னவ்.. வெச்சு செஞ்ச ரசிகர்கள்..

Arnav Jalraas story : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்கள் பலரும் ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருந்தவர்கள் தான். இதனால் இத்தனை நாட்கள் நாம் தொலைக்காட்சிகளிலும்,…

arnav jalraas

Arnav Jalraas story : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்கள் பலரும் ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருந்தவர்கள் தான். இதனால் இத்தனை நாட்கள் நாம் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ரசித்தர்கள், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து காண்பிக்கும் இன்னொரு முகம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் பார்வையாளர்களை தொற்றிக் கொண்டது.

அந்த வகையில் சீரியல் நடிகரான அர்னவ் மீதும் போட்டியாளர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். ஆனால், அவரோ பார்ப்பதற்கு துணிச்சலான ஆள் போல தெரிந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை. யாருடனும் சண்டை போடாமல் இருந்ததுன் மட்டுமில்லாமல் அர்னவின் ஆட்டத்தை பார்த்த பலரும் அவரை போலியான நபர் என்று தான் கூறி வந்தனர். அதே போல, ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் சூழலுக்கு ஏற்றது போல பேசிய அர்னவின் நிஜ முகத்தை தெரிந்து கொள்ளவே முடியவில்லை என பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் வரை குறிப்பிட்டு வந்தனர்.

இதனால், அதிகம் கவனம் ஈர்க்காத அர்னவ், பேட்மேன் ரவீந்தருக்கு பிறகு இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். ஒரு பக்கம் அவரை ஆதரித்த பலரும் அவர் இன்னும் கொஞ்ச நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் நிச்சயம் சிறந்த ஆட்டத்தை பார்த்திருக்கலாம் என குறிப்பிட்டும் வந்தனர். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அர்னவ், பெண்கள் அணியினரை பாராட்டியதுடன் ஆண்கள் அணி பற்றி பேச தொடங்கினார்.

அப்போது, ஆண்கள் அணியில் சிலரை குறிப்பிட்டு டேய் ஜால்ராஸ் என மோசமாக குறிப்பிட்டிருந்தார். இதனை கவனித்த விஜய் சேதுபதி, வன்மத்தை இங்கே காட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இன்னொரு பக்கம் இதனை கவனித்த பார்வையாளர்கள் இந்த ஆட்டத்தை உள்ளே துணிச்சலாக ஆடி இருந்தால் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்திருக்கலாம் என்றும் அர்னவ் பேச்சை விமர்சனம் செய்திருந்தனர்.
arnav insta story on jalraas

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த அர்னவ், சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரியும் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்த அர்னவ், அதில் ‘ஜால்ராஸ்’ என்ற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார். ஆண்கள் அணியை குறிப்பிட்டு இந்த வார்த்தையை அவர் சொல்ல, இப்படி ஒரு ஆட்டத்தை நீங்கள் வீட்டிற்குள்ளேயே விளையாடி இருக்கலாம் என்றும் பலர் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.