பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது ஏற்கனவே எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் வந்துள்ள சூழலில் அர்னவ் வந்த வேகத்தில் பேசிய சில விஷயங்கள் அதிகம் சண்டையை ஏற்படுத்தி இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அர்னவ் நடிக்கிறார் என போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் பார்வையாளர்களாலும் குறிப்பிடப்பட்டு வந்தார். ஆனால் நல்ல ஒரு மனிதனைப் போலவும் வலம் வந்திருந்தார்.
வெளியேறியது வரையில் நல்லவன் போல இருந்த அர்னவ், வெளியே போனதும் மேடையில் அனைவரையுமே சரமாரியாக தாக்கி ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் வைத்ததுடன் மிக சாதாரணமாக வார்த்தைகளையும் பேசி இருந்தார். இதனிடையே, பழைய போட்டியாளர்கள் வந்த போது அர்னவும் மற்ற போட்டியாளர்களுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
நோண்டிகிட்டு இருப்பானே..
அப்போது சத்யா, ஜெஃப்ரி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் அவர்கள் வெளியேறாமல் இருந்தது போல கேள்வி கேட்ட அர்னவ், ‘சட்டை போடவும் சுற்றிக் கொண்டிருப்பானே, அவன் பெயர் என்ன சத்யாவா. அவன் எங்கே’ என கேட்கிறார். அவர்கள் வெளியேறினாலும் தெரியாதது போல் அவர்களை குற்றம் சுமத்துவதற்காக பேசிய அர்னவ், ஜெஃப்ரியை குறிப்பிடும் போது, ‘இன்னொருத்தன் நோண்டிக்கிட்டும், தடவிக்கிட்டும் இருப்பானே. ஜெஃப்ரி தானே, அவன் எங்கே’ என்றும் கேட்கிறார்.
ஜெஃப்ரி எங்கே எனக் கேட்பதற்கு பதிலாக சில தகாத வார்த்தைகளை குறிப்பிட்டு அந்த போட்டியாளரை பற்றி அர்னவ் பேசியதும் அங்கிருந்து ஜாக்குலின், முத்துக்குமரன் உள்ளிட்ட பலருமே கடும் அதிர்ச்சி அடைந்தனர். இல்லாத போட்டியாளரை பற்றி இப்படி பேச வேண்டாம் என அனைவரும் குறிப்பிட முத்துக்குமரனும், ‘அண்ணா நீங்கள் பேசும் வார்த்தை யோசித்து பேசுங்கள். அது தவறு’ என்றும் எச்சரிக்கிறார்.
இங்க அப்படி பேசாதீங்க..
இதே போல ஜாக்குலினும், ‘நீங்கள் வெளியேறிய பின்னர் இங்கு நடந்ததை டிவியில் பார்க்கும் போது உங்களுக்கு கோபம் வந்திருக்கலாம். ஆனால் இது போன்ற வார்த்தைகளை இங்கே பேசக்கூடாது’ என்றும் தெரிவிக்க தீபக் உள்ளிட்ட பலரும் கூட இந்த லிவிங் ரூம் ஏரியாவுக்கு ஒரு மரியாதை இருக்கிறது. இது போன்ற வார்த்தைகளை இங்கே பேசினால் நாங்கள் வெளியேறி விடுவோம் என்று தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதனை எல்லாம் கண்டு கொஞ்சம் கூட அலட்டிக்காத அர்னவ், ஜெஃப்ரி அப்படி செய்தது தப்புதான் என்றும் நான் பேசியதில் எந்தவித தவறும் இல்லை என்றும் கூறுகிறார். அதே போல தான் ஏதாவது தவறு செய்தால் மட்டும் உடனடியாக குறிப்பிடும் போட்டியாளர்கள் ஜெஃப்ரி பற்றி சொன்னதும் ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை என கூறுகின்றார்.
அதே நேரத்தில் ஜெஃப்ரி என்ன செய்திருந்தாலும் அவன் இல்லாத நேரத்தில் அப்படி பேசுவது சரியாக இருக்காது என்றும் அனைவரும் கொந்தளிக்க அர்னவோ தான் பேசியது சரி என்று தொடர்ந்து கொண்டிருக்கிறார்.