பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் எட்டாவது சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் இதன் தொடக்கமே மிக அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது அனைவரையும் புரிந்து கொள்வதற்காக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதில் விறுவிறுப்பான விஷயங்கள் இருக்காது.
ஆனால் இந்த முறை பிக் பாஸ் ஆரம்பித்த 24 மணி நேரத்திலேயே ஒரு எலிமினேஷன் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததும் இதில் மிக வயது குறைந்த போட்டியாளரான சாச்சனா வெளியேறி இருந்ததும் விவாதத்தை உருவாக்கி இருந்தது. எப்படி 24 மணி நேரத்தில் மொத்தமுள்ள 18 போட்டியாளர்களில் ஒருவரை தெரிந்து கொண்டு அவர்களை நாமினேட் செய்ய முடியும் என்றும் இது நிச்சயம் நியாயமான விதி இல்லை என்றும் பிக் பாஸுக்கு எதிரான குரலும் அதிகமாக கிளம்பியது.
இப்படி ஆரம்பமே சர்ச்சையான விஷயங்களுடன் தொடங்கியுள்ளதால் இந்த சீசன் நிச்சயம் முந்தைய சீசன்களை விட களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிட இதில் போட்டியாளர்களாக சிலர் களமிறங்கி இருப்பதும் தொடர்ந்து அவர்களைப் பற்றி பல கருத்துக்கள் வைரலாவதற்கு காரணமாக இருந்து வருகிறது.
சீரியல் நடிகர் அர்னவ் சக நடிகையான திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடும் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடன் செல்லம்மா சீரியலில் இணைந்து நடித்த அன்ஸிதாவை காதலித்ததாகவும் தனது கணவர் குறித்து புகார் ஒன்றை திவ்யா கொடுத்திருந்தார்.
இது தொடர்பாக சில ஆடியோக்களும் லீக்காகி ரசிகர்கள் மத்தியில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் அர்னவ் மற்றும் அன்ஸிதா ஆகிய இருவருமே தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர். இதில் எலிமினேஷனுக்காக ஒவ்வொருவரும் ஒருவரை தேர்வு செய்த சமயத்தில் அன்சிகாவின் பெயரை அர்னவ் கூறி இருந்தார்.
இதற்கான காரணத்தை சொன்ன அர்னவ், “அன்ஸிதா இங்கே இருப்பதை விட வெளியே சென்றால் நிறைய ப்ராஜெக்ட்கள் அவருக்கு வரும். இதனால் அவரை நான் நாமினேட் செய்கிறேன்” என கூறினார். உடனடியாக பிக் பாஸும், “அன்ஸிதாவின் நல்லதுக்காக காரணம் சொல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள காரணத்தை சொல்லி நாமினேட் செய்யுங்கள்” என கூறினார்.
இதன் பின்னர் பேசிய அர்னவ், “இந்த வீட்டில் மற்ற அனைவரும் ஆக்டிவாக இருந்தாலும் அன்ஸிதா அனைவரிடமும் அமைதியாக இருப்பதுடன் கொஞ்சம் ஒதுங்கி இருப்பது போல தான் எனக்கு தோன்றுகிறது” என கூறினார். இதை பார்த்த மக்கள் பலரும் தங்களுக்குள் எதுவும் இல்லை என்பது போல நாடகமாட தான் அர்னவ் அன்ஸிதாவை நாமினேட் செய்தார் என்றும், அவரது நலனுக்காக பேசிய போது பிக் பாஸ் கொடுத்த Thug Life பதிலையும் குறிப்பிட்டு வருகின்றனர்.