மனைவிக்காக சூப்பர் லவ் தீம் மியூசிக்கை போட்ட இசைப்புயல்.. எந்தப் படத்துல தெரியுமா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ஒரு வைப் தான். மனுஷன் போட்ட இசையும் அத்தனையும் பொக்கிஷம். குறிப்பாக 80, 90-களில் பிறந்தவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றால் அது ஒரு வித உயிர்நாடியாகத்தான் இருக்கும். மனிதரின் அத்தனை…

AR Rahman

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ஒரு வைப் தான். மனுஷன் போட்ட இசையும் அத்தனையும் பொக்கிஷம். குறிப்பாக 80, 90-களில் பிறந்தவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றால் அது ஒரு வித உயிர்நாடியாகத்தான் இருக்கும். மனிதரின் அத்தனை உணர்வுகளையும் தனது இசையால் வெளிக்கொண்டு வந்த வல்லமை படைத்த இசை அரசன். இதனால் தான் தனது முதல்படான ரோஜா படத்திற்கே தேசிய விருதைப் பெற்று ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்தார்.

ரோஜா படத்தின் தீம் இசை எப்படி இன்றளவும் நமது உணர்வுகளுடன் கலந்து விட்டதோ அதே போலத்தான் பம்பாய் படத்தின் தீம் இசையும். இயல்பாகவே பம்பாய் படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட் ரகம் தான். அதிலும் குறிப்பாக ஹம்ம.. ஹம்மா பாடலும், கண்ணாளனே பாடலும் இன்றும் அழியா இசை விருந்து அளிக்கும் எனர்ஜி டானிக். முக்கியமாக உயிரே உயிரே பாடல் ஹரிஹரனின் குரலில் காதலர்களைப் பாடாய் படுத்தியது என்றே சொல்லாம். 1995-ல் வெளியான பம்பாய் திரைப்படம் மதக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது.

சென்னையில் ஓர் ஊட்டி.. இனி குழந்தைகள் ராஜ்ஜியம் இங்கதான்.. புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா..அப்படி என்ன இருக்கு தெரியுமா?

தேசிய விருதினையும், மேலும் பல விருதுகளையும் வென்ற பம்பாய் திரைப்படத்தில் பெரிதும் உயிர்நாடியாக விளங்கியது மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் தான். இந்த படத்தின் ரிலீஸுக்கு மறுநாள்தான் ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற லவ் தீம் நிச நிச நிச.. தனது மனைவிக்காகவே உருவாக்கினாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த தீமில் அர்விந்த்சாமி மனிஷா கொய்ராலாவை சைலா பானு என சத்தமாக அழைப்பார். இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவிக்கும் ஓர் சம்பந்தம் உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியின் பெயர் சைரா பானு. எனவே தனது மனைவியின் பெயரை உச்சரிக்கும் வண்ணம் அமைவது போலவே இந்த தீம் பாடலை உருவாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.