ஏஆர் முருகதாஸ் இஸ்லாமிய எதிரி என்றும் சல்மான் கான் படங்களை புறக்கணிக்கவும் என்றும் முஸ்லிம் பிரபலம் ஒருவர் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் உருவான ’சிக்கந்தர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், இது மிகப்பெரிய வெற்றிப் படம் ஆகாது என கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஷேக் பயாஸ் ஆலம் அவர்கள், ’சிக்கந்தர்’ படத்தை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் ஏற்கனவே இயக்கிய ’துப்பாக்கி’ திரைப்படத்தில் இஸ்லாமிய விரோத கருத்துகளை பரப்பியுள்ளார் என்றும், அதனால் ’சிக்கந்தர்’ படத்தையும் சல்மான் கான் படத்தையும் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
’சிக்கந்தர்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், ஏஆர் முருகதாஸின் பழைய படங்களை மனதில் வைத்து ஷேக் பயாஸ் ஆலம் இவ்வாறு கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே நேரத்தில், ’சிக்கந்தர்’ திரைப்படம் மிகவும் பழைய கதையுடன் உருவாகி இருப்பதாகவும், இதில் அதிரடியான காட்சிகள் எதுவும் இல்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. “இன்னும் ராஜா காலத்துக் கதையை எடுத்துக் கொண்டு படமாக்கியிருக்கிறார்கள்” எனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’மதராஸ்’ திரைப்படத்தின் மூலம் முருகதாஸ் கம்பேக் தருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ’சிக்கந்தர்’ திரைப்படத்தின் வசூலும் மிகக் குறைவாக உள்ளதாகவும், இதுவரை 100 கோடியை கூட எட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
