விஜய்யுடன் போட்டி போட்ட ஏ.ஆர் முருகதாஸ்! நான்கு வருடங்கள் காணாமல் போனதற்கு இது தான் காரணமா?

By Velmurugan

Published:

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. அதை தொடர்ந்து தளபதி விஜய் தனது அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட நிலையில் தளபதி விஜய் இந்த படத்தில் இணைந்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து வெளிநாடுகளில் படமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் தளபதி விஜய் அவ்வப்போது தனது அரசியல் பயணத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். திரை உலகில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய்யின் முதல் 100 கோடி திரைப்படம் தான் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி இணைந்து 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படமும் விஜய்க்கு நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பற்றி கொடுத்தது.

அடுத்து மூன்றாவது முறையாக விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானதிலிருந்து பல சர்ச்சைகளை சந்தித்த போதிலும் இந்த திரைப்படமும் விஜய்க்கு சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 66 வது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. அதற்கான கதையும் தயாரான பட்சத்தில் இந்தப்படம் வெளியாகாத காரணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தளபதி விஜயின் 66 வது திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு முன்னதாக விஜயின் 66 ஆவது திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குவதாக தகவல் வெளியாக இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது. பட்ஜெட் குறித்து பல கேள்விகள் தயாரிப்பு தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட்டில் பெரும் பங்கு இயக்குனர் மற்றும் நடிகர்களின் சம்பளமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் இடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி பேச முடியாது. விஜய்யின் கால்ஷீட் கிடைப்பதே பெரிதாக இருக்கும் பட்சத்தில் சம்பளம் குறித்து அவரிடம் பேச முடியாத நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டது.

அடுத்த ஆண்டு சம்பவம் செய்யும் கமல்! அடுத்தடுத்து வெளியாகும் நான்கு திரைப்படங்கள்!

ஆனால் ஏ ஆர் முருகதாஸ் சம்பள விஷயத்தில் கரராக இருந்துள்ளார். இதை அடுத்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் விஜய் இணைந்து எடுத்த முயற்சியின் பேரில் இயக்குனர் மாற்றப்பட்டு இயக்குனர் நெல்சனுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்படித்தான் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஏ ஆர் முருகதாஸின் படத்திலிருந்து விஜய் விலகியதை தொடர்ந்து மற்ற ஹீரோக்களும் ஏ ஆர் முருகதாஸின் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இப்படி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.