அடுத்த ஆண்டு சம்பவம் செய்யும் கமல்! அடுத்தடுத்து வெளியாகும் நான்கு திரைப்படங்கள்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலின் சினிமா வாழ்க்கைக்கு கம்பேக் கொடுத்த திரைப்படம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது. அதற்கு முன்பாக 2015 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி கமல் நடிப்பில் உத்தமவில்லன் திரைப்படம் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜூலை மூன்றாம் தேதி பாபநாசம் திரைப்படம் வெளியாகி இருந்தது. மீண்டும் அதே ஆண்டு தீபாவளிக்கு தூங்காவனம் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஒரே ஆண்டு வெளியான இந்த மூன்று திரைப்படங்களும் கமலுக்கு பெரிதளவு வெற்றியை ஏற்படுத்து கொடுக்கவில்லை.

இந்த திரைப்படங்களின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து அரசியலில் இறங்கிய கமல் அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின்பு 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிட்டார். இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வந்த விஸ்வரூபம் 1 திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக அமைந்தது. இதன்பின் படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

உலக அளவில் கமலின் விக்ரம் திரைப்படம் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து கமலின் திரை வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கமல் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களுடன் கைகோர்த்து தனது படப்பிடிப்புகளில் இணைந்து வருகிறார். அந்த வகையில் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படத்தின் ரிலீஸ் செய்தியை லைக்கா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி கமலின் இந்தியன் 2 திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியும் இந்தியன் 3 திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உறுதியான தகவல் வெளியாக இருந்தது.

அதைத் தொடர்ந்து கமல் ஹெச் வினோத்துடன் இணைந்து நடிக்கும் 233வது திரைப்படம் குறித்த அப்டேட் தற்பொழுது கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படமும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்காக கமல் கால்ஷீட் 45 நாட்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.அதனால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பு நிறைவு பெற்று அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

18 வருடத்திற்கு முன் வெளியான திரைப்படத்தின் இயக்குநரை சமீபத்தில் பாராட்டிய விஜய்!

இந்நிலையில் கமல் பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே அதாவது கல்கி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

இப்படி அடுத்த ஆண்டு அடுத்தடுத்து கமலின் நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் கமல் ரசிகர்கள் தலைவரின் சம்பவத்தை காண ஆவலுடன் காத்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...