திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் “அந்த 7 நாட்கள்” திரைப்படம், வரும் செப்டம்பர் 12, 2025 அன்று அதாவது இன்னும் 7 நாட்களில் திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர், சில மணிநேரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், படத்தின் கதையை அறியும் ஆவலை தூண்டி, ரசிகர்களை நேரடியாக திரையரங்குகளுக்கு வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.
படத்தின் முதல் தனிப்பாடலான “ரதியே ரதியே” ஹரிச்சரண் குரலில், மோகன்ராஜாவின் வரிகளில், சச்சின் சுந்தரின் இசையில் வெளியாகி, சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்த படத்தில் புதுமுகங்களான அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் புதிய திரை அனுபவம் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் தொழில்நுட்பக்குழு வலுவாக உள்ளது. இயக்குநர் எம்.சுந்தர், தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ், ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை, இசையமைப்பாளர் சச்சின் சுந்தர், படத்தொகுப்பாளர் முத்தமிழன் ராமு ஆகியோரின் பங்களிப்பு, படத்தை ஒரு தரமான படைப்பாக மாற்றியுள்ளது.
புதிய முகங்கள், அனுபவமுள்ள கே. பாக்யராஜ், வலுவான தொழில்நுட்பக் குழு மற்றும் ஈர்க்கும் இசை என அனைத்து அம்சங்களும் இணைந்து, “அந்த 7 நாட்கள்” திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
