பிக் பாஸ் 8: 3 வருஷ லவ்.. பிக் பாஸ் வர்றது முன்னாடி ஒன்னு சொன்னாரு.. ஒடஞ்சு போய்ட்டேன்.. எக்ஸ் காதலன் பற்றி அன்ஸிதா..

Anshidha Love Story : பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ஆண்கள் அணியில் இணைந்துள்ள அன்ஸிதா சொன்ன காதல் கதை பலரையும் மனம் உருக வைத்துள்ளது. சமீபத்தில்…

anshidha on her past love story

Anshidha Love Story : பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ஆண்கள் அணியில் இணைந்துள்ள அன்ஸிதா சொன்ன காதல் கதை பலரையும் மனம் உருக வைத்துள்ளது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நுழைந்திருந்தனர்.

இவர்கள் மூலம் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் சில நேரங்களில் சுவாரசியம் நிறைந்தும் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் இருந்து இருவரும் அணி மாறிக்கொள்ள வேண்டும் என்ற சூழலில் இந்த வாரமும் அப்படி இரண்டு பேர் மாறி இருந்தனர். அந்த வகையில் பெண்கள் அணியில் இருந்து அன்ஸிதா ஆண்கள் அணியிலும், ஆண்கள் அணியில் இருந்து ரயான் பெண்கள் அணியிலும் சேர்ந்திருந்தனர்.

கலக்கும் அன்ஸிதா

இப்படி அணிகள் மாறி ஆடும் போது தங்களது சிறந்த கேம் பிளான் மூலம் எதிரணியை வீழ்த்துவதற்கான வழிகளையும் அந்த ஒரு போட்டியாளர் வகுக்கலாம். இதனை ஆண்கள் அணியில் இருக்கும் சிலர் சிறப்பாக செய்து வந்தாலும் பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் பக்கம் போகும் சிலர் அதனை சிறப்பான ஒரு தருணமாக மாற்றவும் திணறுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த வாரம் புதிய ஆளாக உள்ளே நுழைந்த அன்ஸிதா ஆண்கள் அணியில் அனைவருடனும் மிக நட்புடன் இருந்து வரும் நிலையில் ஒரு சிறந்த அணியாகவும் அது விளங்கி வருகிறது.
anshida love story

அன்ஸிதாவால் ஆண்கள் அணியில் பிரச்சனையை உருவாக்க முடியுமா என்பது இரண்டாவது விஷயமாக இருந்தாலும் அவர் அனைவரிடமும் பெண்கள் அணியை காட்டிலும் இங்கே அதிகம் நட்பு பாராட்டி வருவதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் தனது காதல் கதையை அன்ஸிதா தெரிவித்த விதம் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.

அன்ஸிதாவின் காதல் கதை

இதுபற்றி பேசும் அன்ஸிதா, “நான் ஒருவரை 3 வருடம் காதலித்தேன். நான் மிகவும் பொசசிவாக இருப்பேன். எனக்கு ஒருவரை பிடித்து விட்டால் எப்போதும் அவரது அருகில் கொஞ்சிய படி இருப்பேன். எங்கள் காதல் சிறப்பாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், அவர் நினைத்த அளவுக்கு என்னால் அவருக்காக காதலை கொடுக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென அவர் என்னிடம் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறினார். நான் பேயறைந்தது போல நின்று கொண்டிருந்தேன். அவர் மேல் நான் எதுவும் தவறு சொல்லவில்லை. நான் எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பேன். அந்த விதத்தில் நான் தான் ஏதாவது தவறு செய்திருக்க வேண்டும். நான் அவரை ரொம்ப காதலித்தேன். என்னால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை.

anshida with housemates

இப்போதும் கூட என்னால் அவரை மறக்க முடியவில்லை. பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு கூட மருத்துவரிடம் பேசிவிட்டு தான் உள்ளே வந்தேன். என் மனநிலை அப்படிப்பட்டது” என அன்ஸிதா தனது காதல் கதையை மிகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.