தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர்.. ஆந்திராவுக்கு என்.டி.ஆர்.. நாடே கொண்டாடிய இரு சூப்பர் ஸ்டார்களின் நட்பு!

By John A

Published:

தமிழ்நாட்டிற்கு எப்படி எம்.ஜி.ஆர் என்ற காலத்தால் அழியாத மாபெரும் தலைவர் கிடைத்தாரோ அதேபோல்தான் ஆந்திராவுக்குக் கிடைத்த ஒரு தலைவர்தான் என்.டி.ராமராவ். இருவருமே திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து நாட்டை ஆண்டவர்கள். இவர்கள் இருவரும் திரையிலும் சரி, அரசியலிலும் சரி நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள்.

என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர் நட்பு எப்படி உருவானது தெரியுமா? என்.டி.ராமாராவ் 1949-ல் திரையுலகில் அறிமுகமானாலும் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த ’பாதாள பைரவி’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் நடித்த தமிழ் படம் ’கல்யாணம் பண்ணிப்பார்’. காமெடி கதையம்சம் கொண்ட இந்த படமும் சூப்பர் ஹிட்டான நிலையில் தெலுங்கு சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை ஆனார். இதன் பின்னர் என்டி ராமராவ் நடித்த தமிழ் படம் தான் ’வேலைக்காரி மகள்’. இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இதனை அடுத்து ’மருமகள்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான ’சண்டி ராணி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான மூன்று மொழிகளிலுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு என்டி ராமராவ் நடித்த சூப்பர் ஹிட் தமிழ் படம் என்றால் அது ’மாயா பஜார்’. இந்த படத்தில் சாவித்திரி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் எஸ்வி ரங்காராவ் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர இன்னும் சில தமிழ் படங்களில் நடித்துள்ள ராமராவ், சிவாஜியுடன் இணைந்து ’சம்பூர்ண ராமாயணம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதே போல, தமிழில் பின்னர் அவர் நடித்த ’ராஜசேகரா’ என்ற படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்

தொடர்ந்து சில தமிழ் படங்களுக்கு பின்னர் மீண்டும் சிவாஜியுடன் இணைந்து ’கர்ணன்’ திரைப்படத்தில் கண்ணன் கேரக்டரில் நடித்திருந்தார். இன்றும் கிருஷ்ணர் என்றாலே இவரது முகம்தான் ஞாபக்திற்கு வரும் அளவிற்கு கர்ணன் படத்தில் நடிப்பில் தெய்வமாகவே வாழ்ந்திருந்தார் என்.டி.ஆர். ’கண்ணன் கருணை’ என்ற பக்தி படத்தில் மீண்டும் அவர் நடித்ததுடன் மட்டுமில்லாமல் இந்த படத்தை அவரே இயக்கி இருந்தார். அதன் பின்னர் அவர் நடித்தது முழுக்க முழுக்க தெலுங்கு படங்கள் தான்.

நடிகர் என்டி ராமராவ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியும், இயக்கவும் செய்த படங்கள் ஏராளம். சுமார் 20 படங்களுக்கு மேல் அவர் இயக்கியுள்ள நிலையில், ஏறக்குறைய 30 படங்கள் வரை தயாரித்துள்ளார். எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களையும் தெலுங்கில் என்டி ராமராவ் ரீமேக் செய்துள்ளார். அதே போல, என்டி ராமராவ் நடித்த பல தெலுங்கு திரைப்படங்களின் தமிழ் ரீமேக்கில் எம்ஜிஆர் நடித்துள்ளார். பின்னாளில் எம்ஜிஆர் மற்றும் என்டி ராமராவ் முதலமைச்சரான பிறகு நட்பாக இருப்பதற்கு இதுவே ஒரு அடித்தளமாக இருந்தது.

அதன்பின் இருவரும் சேர்ந்து அரசியலில் குதித்து நாட்டை ஆண்டது தனி வரலாறு.