பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது வாரம் மிக அமர்க்களமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்று ரசிகர்கள் மத்தியிலும் அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் புதிய டாஸ்க் ஒன்றையும் பிக் பாஸ் கொடுத்திருந்தது.
Swap டாஸ்க் எனப்படும் இதில் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் இன்னொரு போட்டியாளர்களை போல மாறி உள்ளே வலம்வர வேண்டும் என்பதுதான். உதாரணத்திற்கு அன்ஸிதா ஜாக்குலினாக பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவருக்கும் சக போட்டியாளர்களின் கதாபாத்திரம் கொடுக்கப்பட அவர்கள் எப்படி வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்பதையும் சிறப்பாக பிரதிபலிக்க வேண்டும் என சில விதிகளுடன் பிக் பாஸ் அறிவித்திருந்தது.
அந்த வகையில் சௌந்தர்யா சுனிதாவாகவும், சுனிதா சாச்சனாவாகவும், ஆனந்தி சௌந்தர்யாவாகவும் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்திருந்தனர். இதில் சவுந்தர்யாவாக நடித்திருந்த ஆனந்தி அவரது குரலை மாற்றி பேசியதுடன் எப்படி சவுந்தர்யா நடனமாடி சைலண்டாக பேசிக் கொண்டே இருப்பாரோ அதை அப்படியே பிரதிபலித்துக் காட்டியிருந்தார். ஆனால் அதே நேரத்தில் சவுந்தர்யாவாக நடித்தது பற்றி மற்ற பெண் போட்டியாளர்களிடம் ஆனந்தி சொன்ன விஷயம் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
அப்போது சவுந்தர்யா போல பேசியது பற்றி மற்ற பெண்களிடம் பேசும் ஆனந்தி, “நான் முழுவதுமாக சவுந்தர்யாவை அப்படியே பிரதிபலிக்கவில்லை. நான் பார்த்த சில விஷயங்களை தான் அப்படியே செய்து காட்டினேன். தனியாக ஆடிக் கொண்டிருப்பது, பாட்டிலை வெவ்வேறு இடங்களில் வைப்பது என சவுந்தர்யா செய்த விஷயங்களைத் தான் செய்தேன். சவுந்தர்யாவை போல செய்யும்போது அது மிக வேடிக்கையாக தான் இருக்கிறது. ஆனால் வெளியே இருந்து பார்க்கும்போது அவர் செய்வது கஷ்டமாகத்தான் உள்ளது” என ஆனந்தி கூறியதுமே அவர் அருகில் இருக்கும் சுனிதா, சவுந்தர்யா செய்வது வேடிக்கையாக இருந்தாலும் பெண்கள் அணியில் இருந்து பார்க்கும்போது அது தவறுதான் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
இது தவிர சவுந்தர்யா எந்த போட்டியாளர்களிடம் பேசுவார்கள் என்பதை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அதுதான் வேடிக்கையாக ஏதாவது விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருந்ததாகவும் ஆனந்தி குறிப்பிடுகிறார். அது மட்டுமில்லாமல் இன்னும் அதிகமாக பேசும் ஆனந்தி, சவுந்தர்யாவாக நடிப்பதால் எந்த விதத்திலும் இந்த நிகழ்ச்சிக்கு பங்களிப்பை அளிக்காமல் வெறுமனே இருந்து கொண்டே விளையாடலாம் என்ற பெரிய சாதகம் இருந்தது என்றும் என்றும் சௌந்தர்யாவின் ஆட்டத்திறனை விமர்சனமும், ஜாலியாக கிண்டலும் செய்கிறார்.
சவுந்தர்யாவை போல நடிப்பதற்கு எளிதாக இருக்கிறது என சொல்லியதுடன் மட்டுமில்லாமல் அவர் சரியாக பிக் பாஸ் வீட்டில் பங்களிப்பை கொடுக்கவில்லை என அனிதா கூறியதும் ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறி உள்ளது.