ஆனந்தம் திரைப்படம்.. 8 முறை ஒன்மோர்.. டென்ஷனான மம்மூட்டி.. இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!

Aanandham: ஆர்பி சௌத்ரி 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆனந்தம். இயக்குனர் லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், டெல்லி கணேஷ், தேவயானி, ரம்பா, ஸ்ரீ வித்யா, சினேகா உள்ளிட்டோர்…

Aanandham
Aanandham: ஆர்பி சௌத்ரி 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆனந்தம். இயக்குனர் லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், டெல்லி கணேஷ், தேவயானி, ரம்பா, ஸ்ரீ வித்யா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதைப்படி இரண்டாவது சகோதரரான முரளியை திருமணம் செய்து கொள்ளும் ரம்பாவால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும்.

நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் மாஸ் காட்டிய நடிகர் திலகம்! சிவாஜியின் மறுபக்க ரகசிய அப்டேட்!

அதேபோன்று அடுத்த பிரச்சனையாக அப்பாஸை சினேகா காதலித்து ஒரு கட்டத்தில் அவரது வீட்டை விட்டு வெளியேறி சகோதரர்களின் வீட்டிற்கு வந்து விடுவார். அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் மீதி கதையாக அமைந்திருக்கும்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியை எடுக்கும் போது இயக்குனர் லிங்குசாமிக்கும் பிரபல மலையாள நடிகரான மம்முட்டிக்கும் இடையே சின்ன மோதல் வந்துள்ளது. அதனை லிங்குசாமி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் மூத்த சகோதரரான மம்மூட்டி அவரது வங்கி கணக்கில் பணம் சேர்த்து வைத்திருப்பதை ரம்பா குற்றச்சாட்டாக முன்வைத்து சண்டை போடுவார்.

எடுத்து முடித்த படம்.. மீண்டும் நடித்த சிவாஜி.. ஏன் தெரியுமா..?

அப்போது “இது என்னன்னு தெரிஞ்சா தாங்க மாட்டீங்கடா” என்று மம்மூட்டி பேசும் ஒரு வசனம் வரும். இந்த வசனத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தபோது மம்மூட்டி நடிக்க லிங்குசாமி ஒன் மோர் ஒன் மோர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

சுமார் எட்டு முறை ஒன் மோர் வந்தவுடன் மம்முட்டி டென்ஷன் ஆகிவிட்டார். சட்டென்று லிங்குசாமியிடம் திரும்பி என்ன தம்பி வேண்டும் உனக்கு என கேட்டார். அப்போது லிங்குசாமி அந்த டயலாக்கை சொல்லும்போது நாக்கு தழுதழுக்க சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு காட்சிக்கு 7 முறை ஒன் மோர்.. கண்ணாடி முன் பல மணி நேரம் நடித்துப் பார்த்த சிவாஜி!

அதற்கு மம்முட்டி உடனே அதை டப்பிங்கில் பார்த்துக் கொள் எனக் கூறியுள்ளார். ஆனால் லிங்குசாமி நடிப்பில் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். உடனே மம்முட்டி லிங்குசாமியிடம் நடித்துக் காட்டுமாறு கேட்டுள்ளார். லிங்கசாமியும் நடித்துக் காட்ட அதன் பிறகு ஒரே டெக்கில் மம்மூட்டி நடித்து முடித்துள்ளார்.