204 கோடி வசூல் செய்த அஜித்தின் விசுவாசம்!!

By Staff

Published:

விசுவாசம் என்பது இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது.

இத்திரைப்படத்தில்  ஜெகபதி பாபு, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, ரமேஷ் திலக் , கலைராணி, சுஜாதா சிவக்குமார், பரத் ரெட்டி, சுரேகா வாணி, அனிக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் திரைப்படங்களை இயக்கிய சிவா, அஜித்துடன் இந்தத் திரைப்படத்தின்மூலம் 4 வது முறையாக இணைந்துள்ளார்,

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் ரிலீஸ் ஆனபோது ரிலீஸ் ஆகியது.

c84098fa7abe1fb88577e7dcd64e8ffa

 அஜித்- நயன்தாரா ஜோடி இந்தப் படத்தில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது, சொந்த கிராமத்தின் நன்மைக்காக வன்முறையில் ஈடுபடும் அஜித்திற்கும் அவரது மனைவிக்கும் மனக் கசப்பு ஏற்பட்டு பிரியும் சூழல் ஏற்படுகிறது.

மீதியுள்ள கதையில் அஜித் எவ்வாறு தன் மகள் மற்றும் மனைவியுடன் இணைவார் என்பதை அழகாக சிவா காட்டியிருப்பார்.

அஜித்- அனிகா இடையேயான பாசம் பலரையும் நெகிழச் செய்யும் படி இருக்கும், திரைக்கதை மற்றும் வசனம் டபுள் சப்போர்ட் கொடுக்க, விஸ்வாசம் தாறுமாறாக ஹிட் கொடுத்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அஜித்திற்கும்- அனிகாவிற்குமான கண்ணான கண்ணே பாடல் பல விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு விருதுகளை வாங்கியுள்ளது.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.204  கோடி வரை வசூல் செய்தது.

Leave a Comment