நடிகர் அஜித்குமார் ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடித்த துணிவு திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடித்திருப்பார். போனிக் கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து கதைக்களம் அமைந்திருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்பொழுது அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் பிறந்த நாள் அன்று அதிகாலை 12 மணிக்கு லைகா நிறுவனம் படத்தின் டைட்டில் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும், ஜூலை மாதம் தொடங்கும் என பல தகவல்கள் வெளியாகி இருந்தும் இன்றுவரை படப்பிடிப்பு தொடங்க வில்லை. தற்பொழுது இந்த மாத இறுதியில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
துபாயில் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும், படத்தின் பெரும்பான்மையான பகுதி வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளதாகவும், சில காட்சிகள் மட்டும் சென்னையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் சிறுத்தை சிவா படத்தில் நடிக்க உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த கூட்டணி அடுத்தடுத்து பல படங்களில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
\தளபதி 68 படத்தில் நடிக்க இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கண்டிஷன் போட்ட விஜய்!
முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஜய் மற்றும் ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் தயாரித்து வந்த நிலையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதனால் விஜய்க்கு பதிலாக அவருக்கு போட்டியாக இருக்கும் நடிகர் அஜித்துடன் தயாரிப்பு நிறுவனம் கூட்டணியை தொடங்கியுள்ளது.
மேலும் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான சுறா, வேட்டைக்காரன், சர்க்கார் போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்ததாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை போன்ற காரணங்களால் விஜய்யின் படங்களை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயக்கம் காட்டி வருவதாக தகவல் தெரிவிக்கிறது.