அஜீத் விஜயை விஜய் ரசிகர்கள் தரம் தாழ்ந்து பேசுவதும் விஜய் ரசிகர்களை அஜீத் ரசிகர்கள் தரம் தாழ்ந்து பேசுவதும் நடந்து வருகிறது. அட இது பரவாயில்லங்க வயசு பசங்க ஏதோ ஆர்வக்கோளாறுல பண்றாங்கன்னு விட்றலாம் ஆனால் கமல் ரஜினி ரசிகர்கள் கூட வயது கடந்தும் சண்டை போட்டு கொள்ளும் நிகழ்வு டுவிட்டரில் தினமும் நடக்கிறது.
இதுபோல பதிவுகளை பார்த்த விவேக் இவ்வாறு கூறியுள்ளார். நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னைஇது போல பதிவுகளில் டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால்ப்ளாக் செய்யப்படுவீர்கள் .நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன் என விவேக் கூறியுள்ளார்.