தமிழ் சினிமாவில் ஒரு நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அவருக்கு என தனி ஃபேன்ஸ் பாலோயர்ஸ்கள் இருக்கின்றனர். கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் நடிகராகவும் அஜித் இருந்து வருகிறார். மற்ற நடிகர்களை போல் அடிக்கடி ரசிகர்களை சந்திக்கவில்லை என்றாலும் அவருக்காக ரசிகர் கூட்டம் திரளாக இருக்கின்றனர்.
ரசிகர் மன்றம் கிடையாது. இருந்தாலும் அவர் பிறந்த நாளுக்கு ஆங்காங்கே இருக்கும் அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பல பேருக்கு உதவிகளை செய்து வருகின்றனர். பொது இடங்களுக்கும் அஜித் வருவதே கிடையாது. மற்ற நடிகர்களை போல் அஜித் வெளியே வரத் தொடங்கினால் அவருடைய உண்மையான பலம் என்ன என்பது அன்றைக்கு தெரியும்,
அந்தளவுக்கு ரசிகர்கள் அஜித்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித்தின் ஒவ்வொரு படங்களின் ரிலீஸும் ரசிகர்களுக்கு திருவிழாதான். அஜித் அவ்வப்போது ரசிகர்களை கட்டுப்படுத்தினாலும் பாலாபிஷேகம் செய்வது, ரிஸ்க் எடுத்து அவர் படங்களை வந்து பார்ப்பது என தொடர்ந்து அந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித்தின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது ஒரு ஸ்கூலில் அந்த வீடியோ பதிவாகியிருக்கின்றது. அதில் அஜித்தை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்க முற்படுகின்றனர். அப்போது அஜித் ப்ளீஸ் வேண்டாம். ஸ்கூலில் வைத்து எடுக்க வேண்டாம்.
நான் சொல்லி அனுப்புகிறேன். அப்போ எடுத்துக்கலாம் என்று அவருடைய வாய்ஸ் மட்டும் கேட்கிறது. இருந்தாலும் ஒரு கேமிராமேன் தொடர்ந்து புகைப்படம் எடுக்க அவரை அஜித் ‘தயவுசெய்து கேமிராவை ஆஃப் பண்ணுங்க. இல்லையென்றால் நான் மேடம்கிட்ட சொல்லிடுவேன். என்னை தப்பா நினைச்சுக்காதீங்க’ என சொல்கிறார்.
அதன் பிறகு சுற்றி இருக்கிறவர்களிடம் ‘ நீங்க ஸ்டாஃப்ஸா’ என கேட்கிறார். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. அவரை பொறுத்தவரைக்கும் தன்னால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் வந்து விடக் கூடாது என நினைக்கிறார்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C_2vecFPaek/?igsh=MXI2eWp4OWJzZm9tMA==