அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் அட்டகாசமான டிரைலர்!

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் ‘துணிவு’…

thunivu trailer

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் சற்று முன்னர் ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜீத்தின் அதிரடி ஆக்ஷன் நடிப்பு, வங்கியை கொள்ளையடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள், இடைவிடாத துப்பாக்கி சத்தங்கள், அஜித்தை காவல்துறை பிடிக்க எடுக்கும் முயற்சிகள், அதுமட்டுமின்றி இதில் உள்ள அரசியல் என இந்த படத்தின் கதை இதுவரை தமிழில் வெளிவராத வித்தியாசமான கதையம்சம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வங்கி கொள்ளை காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது என்பதும் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் இந்த காட்சிகள் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மங்காத்தா படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு நெகட்டிவ் கேரக்டரில் அஜித் நடித்துள்ள இந்த படம் மங்காத்தாவை விட இருமடங்கு அதிகமாக வசூல் செய்யும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்பது ட்ரைலரில் இருந்து தெரியவருகிறது.