வரும் ஜூன் மாதத்திற்குள் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்கவில்லை என்றால் அதன் பின்னர் அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம் என நடிகர் அஜித் லைக்கா நிறுவனத்திற்கு கடைசி வார்னிங் கொடுத்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
விடாமுயற்சிக்கு கடைசி வாய்ப்பு:
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் 62-வது படத்திற்காக லைக்கா நிறுவனத்திற்கு தனது ஒட்டுமொத்த கால் ஷீட்டையும் அஜித் ஒதுக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் விக்னேஷ் சிவனுடனான பிரச்சனைகளால் பல மாதங்கள் வீணடிக்க பட்டன. அதன் பின்னர் மகிழ்ச்சி திருமேனிக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில், அவரும் பக்காவாக பிளான் செய்யாமல் பல மாதங்கள் அஜர் பைஜனில் வீணடித்து விட்டதாக கூறுகின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தனர். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவேறாத நிலையில், லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் மிஷன் சாப்டர் ஒன், லால் சலாம் உள்ளிட்ட படங்கள் லைகாவுக்கு படுதோல்வியை கொடுத்த நிலையில், விடாமுயற்சி படத்துக்கு பெரிதாக செலவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்த பட்ஜெட்டை தாண்டி படத்தின் பட்ஜெட் பலமடங்கு சென்று கொண்டிருப்பதால், படப்பிடிப்புக்கு லைகார் நிறுவனம் நிறுத்தி வைத்து விட்டதாக கூறுகின்றனர்.
அஜித்தின் தாராள மனசு:
அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கத்தில் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிவிட்டது. மேலும் வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு அந்த படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் செல்ல உள்ள நிலையில், கடைசியாக இன்னும் இரண்டு மாதங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்குள் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டால் தான் ஃப்ரீயாகி விடுவேன் என்றும் இல்லையென்றால் குட் பேட் அக்லி படத்தை முடித்த பின்னர் தான் தன்னால் அடுத்த கட்டத்திற்கான கால் ஷீட்டை ஒதுக்க முடியும் என்றும் அஜித் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் லைக்கா நிறுவனம் பரபரப்பாக விடாமுயற்சி படத்தின் கெட்ட படப்பிடிப்பை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஆரம்பித்து ஜூன் முதல் வாரத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.