பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் 2007ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவரும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் உள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய் தனியாக வசித்து வருவதாகவும், இருவரும் விவகாரத்து செய்து கொள்ளபோவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது வைரலாகும் அபிசேக் பச்சனின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விவாகரத்து தொடர்பான சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான், விவேக் ஓபராய் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்களுடன் ஐஸ்வர்யா ராய் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தன்னை விட மூன்று வயது குறைவான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். மேலும், திருமணத்திற்கு பின் படம் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து?:
உலக அழகியாக சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் முன்னணி நாயகையானார். மேலும், தமிழில் இருவர், ஜீன்ஸ், எந்திரன், நடிகர் விக்ரமுடன் இணைந்து ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் தனது அசத்தலான நடிப்பினால் பெரிய அளவில் கம்பேக் கொடுத்தார்.
மீண்டும் சினிமாவில் ஆக்டிவான ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மட்டும் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில், ஐஸ்வர்யா ராய் கலந்துக் கொள்ளாததற்கு காரணம் விவாகரத்தாக இருக்குமோ என கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
ராமர் கோயிலுக்கு வராத ஐஸ்வர்யா ராய்:
சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சியிலும், அம்பானியின் சர்வதேச பள்ளி விழாவிலும் , ப்ரோ கபடி லீக் போட்டிகளில் தங்களது ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியின் மேட்ச் பார்க்க மும்பை சென்ற போதும் இருவரும் ஜோடியாக பங்கேற்று வந்தது குறிப்பிடதக்கது.
மாமியார் ஜெயா பச்சனால் தான் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் மேலும் மாமனார் அமிதாப் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் நல்ல புரிதல் உள்ளதாகவும், பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும், ஐஸ்வர்யா ராய் தனது அம்மாவுடன் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.இருந்தாலும் தங்களது மகளுக்காக இணைந்து வாழ்ந்த இருவரும் தற்போது பிரியலாம் என முடிவெடுத்து விட்டார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவில்லை .