90‘S கிட்ஸ்-ஐ கவர்ந்த இந்த டியூன் எந்தப் பாட்டு மெட்டு தெரியுமா? பிள்ளையார் சுழி போட்ட இசைஞானி..

By John A

Published:

90-களில் பிறந்தவர்களா நீங்கள்.. அப்போது லேண்ட்லைன், பட்டன் செல்போன் முதல் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் வரை பயன்படுத்தத் தெரிந்த தலைமுறை தான் நீங்கள். இந்த செல்போன் வந்த புதிதில் பல பாடல்களை ரிங்டோனாக வைத்துக் கொண்டாடியும், மேலும் புதிதாக ரிங்டோன்களை உருவாக்கியும் மகிழ்வார்கள்.

செல்போன் கம்பெனி விளம்பரங்களும் மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களைச் சென்று சேர்ந்தன. ஒவ்வொரு நெட்வொர்க்கிற்கும் விதவிதமான விளம்பரங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன. அவற்றில் ஏர்டெல் நிறுவனம் உருவாக்கிய விளம்பர இசை இன்றும் டிரண்டிங்கில் இருக்கம் ஓர் இசை ஆகும்.

ஏ. ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்த இசையைக் கேட்டாலே மனதில் இனம் புரியா ஓர் சந்தோஷம் உருவெடுக்கும். பாஸிட்டிவ் சிந்தனைகளைக் கொடுக்கும். இந்த இசை பல்வேறு வகைகளில் பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு விதமாக ஒலித்தாலும் தீம் ஒன்றாகவே உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இசை ஒவ்வொரு இந்தியரையும் ஏர்டெல் விளம்பரம் மூலமாக சென்றடைந்தது.

விஜயகாந்த் படத்துக்காக இயக்குனர் பட்ட பாட்டைப் பாருங்க… கொஞ்சம் அசந்தா உயிரே போயிருக்குமே..!

இப்படி ஏர்டெல் விளம்பரத்தின் இசை எங்கிருந்து உருவானது தெரியுமா? அதற்கும் நம் இசைஞானிதான் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்திருக்கிறார். 1997-ல் நாசரின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் தேவதை. வினீத், கீர்த்தி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல்தான் தீபங்கள் பேசும்.. திருக்கார்த்திகை மாசம்.. பாடல்.

இந்தப் பாடலின் முதல் சரணத்தில் வரும்

முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில
பக்கத்துல நெருப்பா அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்தா குத்தமில்ல…

என்ற வரிகளைக் கேட்டுப்பாருங்கள். அப்படியே ஏர்டெல் விளம்பரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அந்த டியூனுடன் 100 சதவீதம் ஒத்துப் போகும். இப்படி ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுடன் ஒன்றுப் பொருந்திப் போகிறது. இதே போல் பல பாடல்கள் இளையராஜாவின் இசையினை ஒத்தே அமைந்திருக்கிறது.