என்னாதிது… எம்ஜிஆருக்கு மறுபடியும் உயிர் கொடுத்துருக்காங்க.. அடடா! என்னம்மா தகதகன்னு ஜொலிக்கிறாரு!

By Sarath

Published:

AI எனும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி சமீப காலமாக மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்களின் முகத்தை AI பயன்படுத்தி வேறொருவரின் முகத்தில் பொருத்தி அந்த வீடியோவை பதிவு செய்து வருகின்றனர்.

எந்த ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ பயன்படுத்துவது அவர் அவர் கைகளில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் போட்டோக்களை தாண்டி தற்போது வீடியோக்களை உருவாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏஐ எம்ஜிஆர்:

இறந்தவர்களை மீண்டும் நேரில் கொண்டுவரும் இந்த டெக்னாலஜியை பலரும் வரவேற்கின்றனர். வளர்ந்து வரும் டெக்னாலஜி அதிக வியப்பில் ஆழ்த்தினாலும், அது ஆபத்து நிறைந்த்தாகவும் உள்ளது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகளின் முகத்தை வைத்து AI டெக்னாலஜியை கொண்டு தவறாக பயன்படுத்தி வருவதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தனர்.

திரையுலக நட்சத்திரங்களை போல அச்சு அசலாக அப்படியே இருக்கும் சில மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம். அவர்களை பார்க்கும் போது நாம் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்து விடுவோம். மேலும் தற்போது, AI டெக்னாலஜியில் திரையுலக நட்சத்திரங்கள் போல இருக்க வேண்டும் என்று அவசியமில்லை நாம் எப்படி இருந்தாலும் நாம் யாரை போல் மாற வேண்டுமோ அதில் எடிட் செய்துக்கொள்ளலாம்.

வைரலாகும் வீடியோ:

இந்நிலையில், ஒருவர் அச்சு அசலாக எம்ஜிஆரை நேரில் கொண்டு வந்து காட்டி உள்ள புதிய ஏஐ வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. “கண் போன போக்கிலே.. கால் போகலாமா” பாடலை எம்ஜிஆரே உயிரோடு நேரில் வந்து பாடுவது போலவே எடிட் செய்துள்ளனர். அதை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ரசித்து பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

ஏஐ டெக்னாலஜி மூலம் எம்.ஜி.ஆரின் படம் எடுத்தால் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் இளம் வயது ஏஐ வீடியோ வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது எம்ஜிஆரின் ஏஐ வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா 2 படத்திற்காக பேட்டி அளித்தபோது தான் முன்னதாக பிறந்திருந்தால் அந்த படத்தை ரஜினி மற்றும் கமலை வைத்து எடுத்திருப்பேன் என்று கூறியிருந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யா, லாரன்ஸ் முகத்திற்கு பதிலாக ரஜினி ,கமல் முகத்தை வைத்து எடிட் செய்தது வைரலானது. மேலும் எம்.ஜி. ஆர் ரசிகர்கள் அவரை வைத்து எடிட் செய்த விடியோவை ஷேர் செய்து ரசித்து வருகின்றனர்.