ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. கர்நாடக சட்டமன்றத்தில் பொருத்தப்பட்ட ஏஐ கேமிரா..!

  கர்நாடக சட்டமன்றத்தில் ஏஐ டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை அடுத்து இனி எம்எல்ஏக்கள் வருகை, உள்ளே அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்போது வெளியே போகிறார்கள் என்பதை மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள…

karnataka assembly

 

கர்நாடக சட்டமன்றத்தில் ஏஐ டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை அடுத்து இனி எம்எல்ஏக்கள் வருகை, உள்ளே அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்போது வெளியே போகிறார்கள் என்பதை மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஏஐ டெக்னாலஜி தற்போது அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது என்பதும் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் ஏஐ டெக்னாலஜியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேமரா எம்எல்ஏக்கள் என்ட்ரி ஆகும் நேரம், உள்ளே அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், சட்டசபையில் இருந்து எப்போது வெளியே போகிறார்கள் என்பதை துல்லியமாக தகவல்களை சேகரித்து கொடுக்கும்.

ஜூலை 15 முதல் இந்த கேமரா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் இந்த கேமராவில் முதல் நபராக காங்கிரஸ் எம்எல்ஏ சதா சதாக்ஷரி என்பவர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டசபைக்கு உள்ளே எம்எல்ஏக்கள் சபையில் நடப்பவற்றை கவனிக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் செய்கிறார்களா என்பதை இந்த ஏஐ கேமிரா கண்காணிக்கும் என்றும் இதன் மூலம் சட்டசபையில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி சட்டசபைக்கு வரும் நபர்கள் அனைவரையும் இந்த கேமரா  படம் பிடிக்கும் என்பதால் திருட்டுத்தனமாக யாரும் உள்ளே நுழைய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக சட்டமன்றத்தில் ஏஐ டெக்னாலஜி கேமரா வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து மற்ற மாநில சட்டமன்றங்களில் இந்த கேமரா வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.