தனுஷ் நடித்துவரும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் நிலையில் அவர் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாயகி உள்பட படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் கார்த்திக் நரேன் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கொடி படத்தில் தனுசுடன் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே