பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்த நாட்களில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்.. அடுத்து என்ன நடக்கும்..!

By Bala Siva

Published:

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் முதல் எலிமினேஷனில் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் அனன்யா ராவ் வெளியேறினார் என்பது நிகழ்ச்சியை பார்த்து அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அனன்யா ராவ் வெளியேறிய நிலையில் இன்னொரு போட்டியாளர் வெளியேறியதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் அந்தோணி, நிக்சன், விஷ்ணு தேவி, மணிச்சந்திரா, அக்சயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவணன் விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மாஆகிய 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.

முதல் நாளே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்தனர் என்பதையும் அடுத்தடுத்த நாள்களில் கிட்டத்தட்ட அடிதடி சண்டை வரும் அளவுக்கு சண்டை போட்டுக் கொண்டனர் என்பதையும் பார்த்தோம். குறிப்பாக கேப்டன் விஜய் சக போட்டியாளர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டிருந்ததை கமல்ஹாசனே கண்டித்து அவருக்கு ஸ்ட்ரைக் அட்டையை காண்பித்தார். இதேபோல் மூன்று அட்டையை பெற்றால் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்றும் அவர் வார்னிங் கொடுத்தார்.

இந்த நிலையில் நாமினேஷனில் இருந்த ஏழு போட்டியாளர்களில் அனன்யா ராவ் குறைந்த வாக்குகள் பெற்றதால் அவர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தவுடன் சோகத்துடன் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் பவா செல்லதுரை பிக் பாஸ் இடம் வந்து தன்னால் இந்த போட்டியில் தொடர முடியவில்லை என்றும் நான் வெளியேற விரும்புகிறேன் என்றும் என்னை வெளியே அனுப்ப உதவி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து அவருக்கு ஆறுதல் கூறிய பிக் பாஸ், நீங்கள் இந்த வீட்டில் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மீண்டும் கன்பஷன் அறைக்கு சென்ற பவா செல்லதுரை தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் நெஞ்சு வலிக்கிறது என்றும் தன்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என்றும் தயவுசெய்து என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து பிக்பாஸ் அவரை வெளியே அனுப்ப சம்மதித்தார்.

இந்த கன்பஷன் அறையிலிருந்து நீங்கள் இன்னொரு கதவு வழியாக வெளியேறிவிடலாம் என்றும் உங்களுடைய லகேஜ் எல்லாம் உங்கள் வீட்டிற்கு வந்து விடும் என்றும் தெரிவித்தார். மேலும் நீங்கள் வெளியேறுவதை நானே சக போட்டியாளர்களிடம் சொல்லிக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் உங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதற்கு நன்றி என்றும் பிக் பாஸ் தெரிவித்தார். அதற்கு பவா செல்லதுரை இந்த நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. சக போட்டியாளர்களும் என்னை அப்பா போல் மரியாதையாக நடத்தினார்கள். நானும் அவர்களுக்கு கதைகள் கூறி அறிவுரைகள் கூறினேன். ஆனால் என்னுடைய உடல்நிலை காரணமாகத்தான் நான் வெளியேறுகிறேன் என்று கூறினார் .

இதையடுத்து கன்பஷன் அறையில் உள்ள இன்னொரு கதவு திறக்கப்பட அந்த கதவு வழியாக பவா செல்லதுரை வெளியேறிவிட்டார். அனன்யா ராவ்,  பவா செல்லதுரை என அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டதால் வைல்ட்கார்டு என்று புது போட்டியாளர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...