பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் பல நடிகர் நடிகைகளை தனது வழக்கறிஞர் தொழில் மூலம் அலற விட்டவர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவராக ஆனந்தன் என்பவர் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளை நடத்தினார் என்பதும் குறிப்பாக நடிகர் பிரசாந்த் மற்றும் அவருடைய மனைவி கிரகலட்சுமி விவாகரத்து வழக்கில் பிரசாந்த்துக்காக இவர்தான் ஆஜராகி அவருக்கு நியாயம் கிடைக்க வைத்தவர் என்றும் கூறப்படுகிறது.
அதைப்போல் பிரகாஷ்ராஜ் – லலிதகுமாரி தம்பதிகள் விவாகரத்து வழக்கில் இவர் லலித குமாரி சார்பாக ஆஜராகி அவருக்கு நியாயத்தை பெற்று கொடுத்தார். பெரிய நடிகர் நடிகைகள் விவாகரத்து வழக்கில் பெரும்பாலும் இவர் தான் ஆஜராகி அவர்களுக்கு சார்பாக தீர்ப்பை தனது திறமையான வாதத்தால் பெற்று கொடுத்து இருக்கிறார் என்றும் பணத்திற்காகவோ அல்லது மிரட்டலுக்காக பயந்து பணிகிற ஆள் இல்லை என்றும் நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் அவர் வாதிடுவார் என்றும் கூறப்படுகிறது. இவர் பல எதிர் தரப்பு நடிகர் நடிகைகளை தூக்கமில்லாமல் தவிக்க வைத்தவர் என்றும் கூறப்படுகிறது.
நடிகை வடிவுக்கரசி வழக்கு, நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் மோகன் சர்மா வழக்கு உள்பட பல வழக்குகளில் ஆஜரானது ஆனந்தம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கத்திற்கு எதிராக எவ்வளவு பெரிய ஆள் இருந்தாலும் தயங்காமல் நியாயத்தை பெற்றுக் கொடுப்பவர் என்ற பெயரை எடுத்து உள்ள ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை அடுத்து அந்த கட்சிக்கு புதிய உற்சாகம் பிறந்து உள்ளதாக கூறப்படுகிறது.