அதிதி ராவ் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் அதிதி ராவ்.
2007 ஆம் ஆண்டு சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதிதி ராவ். அதைத் தொடர்ந்து இந்தி மராத்தி போன்ற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு கார்த்தியுடன் இணைந்து காற்று வெளியிடை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் அதிதி ராவ்.
அதைத்தொடர்த்து செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா போன்ற திரைப்படங்களில் நடித்தார் அதிதி ராவ். இது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு டப்பிங் செய்திருக்கிறார் மற்றும் பின்னணி பாடகியாகவும் புகழ் பெற்றவர் அதிதி ராவ்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் சித்தார்த்தை அதிதி ராவ் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்களை ஆகிறது. தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அதிதி ராவ் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை பற்றி கூறியிருக்கிறார்.
அதிதி ராவ் கூறியது என்னவென்றால், சித்தார்த் மிகவும் நல்லவர் செயற்கை தன்மை இல்லாதவர். எப்போதும் ஒரே மாதிரியே இருப்பார். நாங்கள் திருமணம் செய்து கொண்ட போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தோம். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டோம் என்று பகிர்ந்து இருக்கிறார் அதிதி ராவ்.