திருமணமா? அரசியலா? நடிகை த்ரிஷாவின் சுவாரஸ்யமான பதில்..!

Published:

பொன்னியின் செல்வன் பட விழாவில் திருமணம் எப்போது மற்றும் அரசியலில் இணைய விருப்பமா ஆகிய கேள்விகளுக்கு நடிகை த்ரிஷா சுவாரஸ்யமான பதில் கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று டெல்லியில் இந்த படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா , ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.

trisha-1

இந்த நிலையில் இந்த விழாவிற்கு பின் செய்தியாளர்களை பேசிய நடிகை த்ரிஷா திருமணம் எப்போது என்ற கேள்விக்கு ‘இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை, என் உயிர் அவர்களோடு தான், இப்போதைக்கு இப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் அரசியலில் இணைய வாய்ப்பு உள்ளதாகவே வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ’எனக்கு சத்தியமாக அரசியல் ஆசை இல்லை, அரசியலுக்கு வருவது தொடர்பான சிந்தனை எனக்கு சுத்தமாக இல்லை என்று தெரிவித்தார். பொன்னின் செல்வன் திரைப்படத்தில் அரசியல் காய்களை நகர்த்தும் குந்தவை கேரக்டரில் நடித்து இருந்த த்ரிஷாவுக்கு நிஜ வாழ்வில் அரசியலில் விருப்பமில்லை என்று கூறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வரும் நிலையில் அவர் தற்போது விஜய் நடித்து ’லியோ’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் உங்களுக்காக...