நடிகை திரிஷா இன்று கோவை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சூர்யா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. கங்குவா படத்திற்குப் பின்னர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக சூர்யா 45 படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது படக்குழுவினருடன் நடிகை திரிஷா இணைந்துள்ளார். தற்போது சூர்யா-திரிஷா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நேற்று திரிஷா திரைத்துறையில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். திரிஷா முதன் முதலாக சூர்யாவுடன் கதாநாயகியாக அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் நடித்தார். இதனையடுத்து ஆறு திரைப்படத்தில் நடித்தனர். மேலும் ஆய்த எழுத்து படத்தில் நடித்தாலும் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார்.
விக்ரமனின் மென்மையான சினிமா: பூவே உனக்காக தலைப்பு மர்மம்!
அதற்கு முன்னதாக ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்தார். மேலும் விளம்பரப்படங்களிலும் நடித்து வந்தார். கில்லி திரைப்படம் திரிஷாவுக்கு திரையில் நிரந்தர இடத்தினைக் கொடுத்தது. இன்றும் ஹீரோயினாக நடித்து வரும் திரிஷா அடுத்தடுத்து விடாமுயற்சி, தக் லைஃப் என பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை கோவை மருதமலை முருகன் கோவிலில் சென்று வழிபாடு செய்தார். திரிஷாவைப் பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.