இளையராஜாவின் இசையை உலகம் முழுக்க பரப்பிய நாயகி : மர்மங்களிலேயே முடிந்த வாழ்வு

By John A

Published:

சினிமாவில் நடித்து எவ்வளவு புகழ் பெற்றாலும், சில நடிகைகளின் வாழ்வு மர்மமாகவே முடிந்து விடுகிறது. நடிகை ஷோபா, விஜி, சிலுக்கு, மோனல், பிரதியுஷா, சின்னத்திரை நடிகை சித்ரா போன்ற நடிகைகளின் மர்ம மரணங்களுக்கு இன்று வரை விடை தெரியவே இல்லை. அதேபோல் இயற்கை மரணம் எய்தினாலும் தனது வாழ்க்கையை மர்ம பக்கங்களாகவே வைத்திருந்தவர் நடிகை சுஜாதா.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா சிறுவயதிலேயே கேரளத்திற்குக் குடிபெயர்ந்தார். சுஜாதாவைப் பற்றி சினிமா வட்டாரங்களில் அவ்வளவாகத் தெரியாது. அந்த அளவிற்கு தனது வாழ்க்கையை தனிப்பட்டதாக அமைத்துக் கொண்டார். மலையாளத்தில் அறிமுகமான சுஜாதா கே. பாலச்சந்திரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி முதல் படத்திலேயே முத்தான நடிப்பைப் பதிவு செய்து அப்போதுள்ள பெண்களின் ரோல் மாடலாகத் திகழ்ந்தார்.

அந்தப் படத்தைப் பார்த்தால் அது நடிகை சுஜாதாவுக்கு முதல் படம் என்று யாராலும் சொல்ல முடியாது. அந்தத் திரைப்படத்தில் சுஜாதாவின் கவிதா கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விடவும் முடியாது. நிஜ வாழ்க்கையில் கவிதா எப்போதும் பெண்களுக்கு முன் உதாரணம் தான்.

செம நடிப்புன்னு சொல்ற மாதிரி எந்தப் படமும் இல்ல.. ஆனாலும் டாப் ஹீரோயினாக ரம்பா வலம் வந்த ரகசியம்

இதனையடுத்து இவர் நடித்த அன்னக்கிளி படம் இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தது. மேலும் ராசைய்யா என்ற இளையராஜாவை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய படமும் இதுவே.  இளையராஜாவின் இசையில் மச்சானைப் பார்த்தீங்களா என்ற ஜானகியின் குரலில் அமைந்த படப் பாடலை அருமையான நடிப்பில் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார் சுஜாதா.

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தென்னிந்தியா முழுக்க வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன.இப்படி தென்னிந்தியா முழுக்க வலம் வந்த நடிகை சுஜாதா, ஒரு சூழ்நிலையில் யாருமே சந்திக்க முடியாத அளவிற்கு ஒதுங்கி இருந்தார்.

1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். இவர் ஜோடியாக நடித்த அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாகவும் நடித்தார். சிவாஜி கணேசன் மறைந்த தருணத்தில் நடிகை மனோரமாவுடன் சேர்ந்து ஊர்வலத்தில் நடந்து வந்தார். சிவாஜி வீட்டிற்குள் அமர்ந்திருந்த அவரை பல ஊடகங்கள் பேட்டி எடுக்க முயற்சி செய்தும் அது தோல்வியிலேயே முடிந்தது.

நடிகை சுஜாதா உச்ச நடிகையாக இருந்த பொழுதும் அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியாது. தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம் வரலாறு. தெலுங்கில் ஸ்ரீ ராமதாசு என்ற திரைப்படத்தில் கடைசியாக இவர் நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு இருதயக் கோளாறால் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.