16 வருஷம் ஒண்ணா வாழ்ந்தும் குழந்தை இல்லை.. நடிகை ரேவதியின் விவாகரத்துக்கு என்ன காரணம்?

நடிகை ரேவதி தனது 17ஆவது வயதில் சினிமாவுக்கு வந்து 20வது வயதில் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அவர் கணவரை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

நடிகை ரேவதி 17 வயது இருக்கும்போது பாரதிராஜாவால் கண்டுபிடிக்கப்பட்டு ’மண்வாசனை’ என்ற திரைப்படத்தில் முத்துப்பேச்சி என்ற கனமான கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டருக்கு ரேவதி பொருத்தமாக இருக்க மாட்டார் என்று அவரது உதவி இயக்குனர்கள் கூறியதாகவும் ஆனால் இவர் மிக சரியாக இருப்பார் என்று பாரதிராஜா பிடிவாதமாக அவரை நாயகியாக நடிக்க வைத்ததாகவும் கூறப்படுவதுண்டு.

18 வயதில் கொடிகட்டி பறந்த நடிகை திவ்யபாரதி.. 19 வயதில் மர்ம மரணம்.. என்ன நடந்தது?

பாரதிராஜா எதிர்பார்த்தபடியே அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. ரேவதியின் நடிப்பிற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்தது. முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் அவருக்கு ஏகப்பட்ட படங்கள் குவிந்தது.

revathi1

குறிப்பாக அவரது மூன்றாவது படமே ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் கைகொடுக்கும் கை. அந்த படத்தில் அவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து அவர் கடைசி வரை ரஜினியுடன் வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவி.. சாமியார் கை காட்டியவரை திடீரென திருமணம் செய்த அதிசயம்..!

ஆனால் அதே நேரத்தில் ’வைதேகி காத்திருந்தால்’ ’உன்னை நான் சந்தித்தேன்’ ’கன்னி ராசி’ ’உதயகீதம்’ ’பகல் நிலவு’ என தொடர்ச்சியாக ரேவதிக்கு ஹிட் படங்களாக வந்ததால் அவருக்கு மார்க்கெட் அதிகரித்ததோடு, சம்பளமும் அதிகமானது.

17 வயது சினிமாவுக்கு வந்து மூன்றரை வருடங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்த போது தான் அவர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்தார். இவர்கள் 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இருவரும் பிரித்ததாகவும் கூறப்பட்டது.

விவாகரத்துக்கு பின்னர் ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ’இதுவரை என் வாழ்க்கையில், பல பிரச்சனைகளை சந்தித்து தாண்டி வந்திருக்கிறேன். அதே போல் தாய்மை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும் அதற்காக ஏங்கி இருக்கிறேன். அதனால் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொண்டேன். அந்த குழந்தை தான் மஹி. ஆனால் அவள் என் தத்து மகள் என பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் இது குறித்து அதிகமாக நான் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

16 வயதில் ஹீரோயின், 17 வயதில் திருமணம்.. 18வது வயதில் தற்கொலை.. என்ன நடந்தது நடிகை ஷோபா வாழ்வில்..?

தற்போது கூட நடிகை ரேவதி சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் கடந்த ஆண்டு வெளியான தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரேவதியின் சினிமா வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அவரது சொந்த வாழ்வில் மிகப்பெரிய அளவில் சோதனைகள், சோகங்கள் எல்லாம் இல்லை. குழந்தை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர் கணவரை பிரிந்ததாக கூறப்படுகிறது, மற்றபடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் இன்று வரை சந்தோசமாக தான் உள்ளார்.