நடிகர் திலகம் சிவாஜியை வைத்து இயக்கிய நடிகை பத்மினி!..

By Velmurugan

Published:

தமிழ் சினிமா ரசிகர்களுக்காக 300 திரைப்படங்களுக்கு மேல் கொடுத்த பிரம்மாண்ட நடிகர் தான் நடிகர் திலகம் சிவாஜி. இவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் நடிகர் திலகத்தை வைத்து பல இயக்குனர்கள் படம் இயக்கி இருந்தாலும் நடிகை பத்மினி நடிகர் திலகத்தை இயக்கியுள்ளார் என்ற தகவல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மைதான். மாறாக நடிகர் திலகம் சிவாஜியை வைத்து நடிகை பத்மினி படம் ஒன்றை இயக்க வில்லை அதற்கு பதிலாக பாடல் காட்சி ஒன்றை இயக்கியுள்ளார். அது எந்த பாடல் காட்சி எந்த படத்தில் அது இடம்பெறுகிறது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகாலமாக நிலைபெற்று 250 படங்களுக்கு மேல் நடித்த முன்னணி பிரபல நடிகைகளில் ஒருவர் பத்மினி. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பழமொழிகளில் நடித்திருந்தாலும் 1947 ஆம் ஆண்டு கன்னிகா திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்து வந்த நடிகை பத்மினி எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ் , ராஜ் கபூர் , ஷம்மி கபூர் , ராஜ்குமார் , ஜெமினி கணேசன்,எஸ்.எஸ்.ராஜேந்திரன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி உடன் இணைந்து கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் பணம். குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜிக்கும் இதுதான் முதல் திரைப்படம். ஆனால் சிவாஜி நடிப்பில் பராசக்தி திரைப்படம் முதல் முதலில் வெளியானதால் அந்தப் படம் தான் சிவாஜியின் முதல் படமாக பார்க்கப்படுகிறது.

பணம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி மற்றும் நடிகை பத்மினி இணைந்து 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் அன்பு, தூக்கு தூக்கி, இல்லற ஜோதி, மங்கையர் திலகம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து சிவாஜி உடன் இணைந்து மனைவி அண்ணி அம்மா என மூன்று கதாபாத்திரத்திலும் நடித்த ஒரே நடிகை என்ற பெருமை நடிகை பத்மினிக்கு உள்ளது.

இதற்கு உதாரணமாக 1954 ஆம் ஆண்டு வெளியான எதிர்பாராதது திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். அதில் நடிகர் திலகம் சிவாஜி பத்மினி அவர்களை காதலிப்பார். அதன் பிறகு படிப்பிற்காக வெளிநாடு செல்லும் பொழுது ஒரு விமான விபத்தின் காரணமாக நடிகர் திலகம் சிவாஜி இறந்து விடுவதாக செய்திகள் பரவி வரும், அதை தொடர்ந்து நடிகை பத்மினி நடிகர் திலகம் சிவாஜியின் தந்தையை திருமணம் செய்து கொள்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அப்போது சிவாஜியை காதலித்து வந்த பத்மினி படத்தின் மற்றொரு பாதியில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது போல அமைக்கப்பட்டிருக்கும்.

ரிலீசுக்கு முன்பே 250 கோடி பிசினஸ் செய்த அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்!

இதைத்தொடர்ந்து வெளியான பல திரைப்படங்களில் சிவாஜியின் பத்மினியும் காதலராக நடித்திருந்தாலும் மங்கையர் திலகம் திரைப்படத்தில் நடிகர் சிவாஜியின் அண்ணியாக நடிகை பத்மினி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தங்கப்பதுமை. அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒருநாள் இயக்குனர் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அன்று ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டிய நாள். அந்த நாள் தவறிவிட்டால் அந்த காட்சி மற்றொரு நாள் படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலை அமைந்திருந்தது. ஆனால் நடிகை பத்மினிக்கு இந்த படத்தில் நடிக்கும் பொழுது பல படங்களில் கமிட் ஆகி இருந்ததால் மற்றொரு நாள் இந்த பாடல் காட்சிக்காக நாள் ஒதுக்க நேரமில்லை. அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் நடிகை பத்மினி பிஸியாக நடித்து வந்ததால் கால்ஷீட் கொடுப்பதில் சில பிரச்சனைகள் இருந்துள்ளது.

அதை முறையாக நடிகை பத்மினி கையாண்டு உள்ளார். இயக்குனரிடம் தான் இந்த பாடல் காட்சியை டைரக்ஷன் செய்வதாகவும் நடிகர் சிவாஜி அதில் நடிக்கட்டும் என கூறி சம்மதம் வாங்கி அந்த பாடல் காட்சியை சிவாஜி அவர்களை நடிக்க வைத்து நடிகை பத்மினி இயக்கியுள்ளார். பத்மினி கூறுவது போன்ற சிவாஜி நடித்து வந்ததால் அந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகை பத்மினியை சிவாஜி மேடம் என்றே அழைத்து வந்துள்ளார். அப்படித்தான் தங்கப்பதுமை படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்தது. நடிகர் திலகம் சிவாஜியை பல முன்னணி இயக்குனர்கள் இயக்கி வந்த நேரத்தில் தன்னுடன் நடித்த சக நடிகை இயக்குவதை ஏற்றுக்கொண்ட சிவாஜியின் பெருந்தன்மை அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.