ரிலீசுக்கு முன்பே 250 கோடி பிசினஸ் செய்த அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்!

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான வேதாளம்,வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இதற்கிடையில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பழமையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து நடிகர் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருந்தது. ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் நடித்து வெளியான மெகா ஹிட் திரைப்படம் தான் துணிவு.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்பொழுது மகில் திருமேனி இயக்கத்தில் தனது 62 ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அஜித்தின் பிறந்தநாள் அன்று மே ஒன்றாம் தேதி படத்தின் அறிவிப்பு மிக பிரம்மாண்டமாக வெளியானது. அஜித்தின் 62வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இந்த படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விடா முயற்சி படத்தில் அனிருத் இணைந்திருப்பதால் இந்த படத்தில் அதிரடியான பிஜிஎம் மற்றும் தர லோக்கல் ஆன பாடல்கள் இருக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விடாமுயற்சி திரைப்படத்தில் தளபதி அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அதற்காக தன் இடையை குறைத்துள்ளதாகவும் பல செய்திகள் வெளியாகி வருகிறது. இதன் மூலம் மிக ஸ்டைலான அஜித்தை இந்த படத்தில் பார்க்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித்திற்காக மிகச் சிறந்த காஸ்டியூம் டிசைனரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதனால் அஜித்தின் லுக் படம் முழுக்க மிகவும் ஸ்டைலாகவும் எனர்ஜிடிக்காகவும் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். அஜித்துடன் இதற்கு முன்னதாக நான்கு வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் விடா முயற்சி படத்தில் இணைந்துள்ளது.

விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து பிரியா பவானி சங்கர், நடிகை ரெஜினா ஆக்சன் கிங் அர்ஜுன் பிக் பாஸ் புகழ் ஆரவ், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம் கட்டப்பட படிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து 70 நாட்கள் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் துபாய் சுற்றுப்பகுதிகளில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி பிப்ரவரி மாதத்திற்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பத்தாவது இடத்திற்கு சென்ற அஜீத்! முதல் இடத்தை தட்டி பறித்த தளபதி விஜய்! காணாமல் சென்ற கமல்!

இந்த நிலையில் தற்பொழுது விடா முயற்சி படத்தின் பிசினஸ் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. விடாமுயற்சி படத்திற்கு நடிகர் அஜித்திற்கு 110 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பிசினஸ் பெரிதளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை மிகப்பெரிய நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

படத்தில் ரிலீசுக்கு முன்பே டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விட்டுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்த விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.