அக்காவுக்கு வந்த வாய்ப்பு.. அலேக்காக அள்ளிய ஊர்வசி.. முந்தானை முடிச்சு ஹீரோயின் ஆனது இப்படித்தான்!

By John A

Published:

இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா படத்தில் ஒரு சீன் வரும். அர்விந்த்சாமி அக்காவைப் பெண் பார்க்கப் போகும் போது வைஷ்ணவி வேண்டாம் என்று கூறச் சொல்ல, பின் அவர் மதுபாலாவைப் பெண் கேட்பார். இதுபோல்தான் ரியல் ஃலைப்பிலும் ஒரு நடிகைக்கு நடந்திருக்கிறது. அந்த நடிகைதான் ஊர்வசி. ஊர்வசி என்றதுமே அந்த வெகுளிச்சிரிப்பு தான் நினைவுக்கு வரும்.

“சிம்ஹம் நவ்விந்தி” என்ற தெலுங்குப் படத்தில் என்.டிஆர் மகன் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இதில் நாயகி கலாரஞ்சனி. அப்போது தான் இயக்கும் புதுப் படத்துக்கு பாக்யராஜ் நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார். கலாரஞ்சனியின் போட்டோவை பார்த்த அவர் மேக்கப்டெஸ்ட்டுக்கு அழைக்க கலாரஞ்சனி அம்மாவோடும், தங்கையோடும், சித்தப்பா உண்ணியோடும் வருகிறார்.

பாக்யராஜ் ஒரு டயலாக் ஷீட் கொடுத்து படிக்கச்சொல்ல கலாரஞ்சனி தமிழைப்பார்த்து தடுமாறுகிறார். தங்கை அழகாக படித்து சொல்லிக்கொடுக்க கலாரஞ்சனியும் சொல்ல மேக்கப் டெஸ்ட் முடிகிறது. மூன்று மாதம் கால்ஷுட் கேட்க சித்தப்பாவோ மூன்று மாதத்தில் நான்கு படங்களில் நடித்து விடலாம் என நினைத்து மறுப்பு தெரிவித்து அழைத்து வந்து விடுகிறார்.

கலாரஞ்சனி திருப்தி அளிக்காததால் பாக்யராஜ் இளவரசி, ஷோபனா, அஸ்வினி, சசிகலா என முயற்சித்தும், டெஸ்ட் நடத்தியும் யாரும் அமையவில்லை. கடைசியாக கலாரஞ்சனியின் தங்கை நன்றாக டயலாக் பேசினாரே அவரை கேட்கலாம் என அழைத்து வரச்சொல்கிறார்கள். அவரும் அம்மாவும், சித்தப்பாவும் கூட வர மேக்கப் டெஸ்ட் ஷூட்டை அசோக்குமாரே செய்கிறார். அப்படி தேர்வு செய்யப்பட்ட கவிதா என்கிற அந்தப்பெண் தான் பின்னாளில் பட்டி தொட்டியெங்கும் முதல் படத்திலேயே புகழ் பெற்ற ‘முந்தானை முடிச்சு’ ஊர்வசி.

ஜீரோ சைஸ் நாயகிகளுக்கு சவால்விட்டு ஜெயித்த கல்பனா.. ‘சின்ன வீடு‘ படத்தை மறக்க முடியுமா?

முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஊர்வசிக்கு 14 வயது. மௌண்ட் ரோடு முழுக்க இருந்த பேனர்களையும்,’போஸ்டர்களையும் பார்க்காமல் ஒன்றரை வருடத்துக்கு முன் தந்தை இறந்தது போய் விட்டாரே என்கிற துக்கம் ஊர்வசிக்கு உண்டு. பட வாய்ப்புகள் குவிந்ததால் ஒன்பதாம் கிளாஸ் பாதியிலேயே நின்று போனது.

எல்லாம் அந்த முதல் படம் மட்டும் தான். அதற்குப்பிறகு அவர் நடித்த படங்களெல்லாம் சொல்லிக்கொள்ளும் படி அமையவேயில்லை. அபூர்வசகோதரிகள் படத்தில் சுஹாசினி, ராதாவுக்கு தங்கை, கொம்பேறி மூக்கனில் சரிதாவோடு இரண்டாவது நாயகி, அம்பிகை நேரில் வந்தால் ராதாவோடு இப்படி லைட் ரோல்களே அமைந்தன.

சரண் மேல் தீவிர நம்பிக்கை வைத்த அஜீத்.. கதையே கேட்காமல் நடித்த காதல் மன்னன்

லக்ஷ்மி நடித்த மலையாள ‘சட்டக்காரி’, அழுத்தமான ரோலில் ‘ஓ மானே மானே’ படத்தில் நடித்தார். அதுவும் பெயர் வாங்கித்தரவில்லை. தமிழ்ப்படங்களில் ஒரு புறம் ஏறிய ஏணிகளிலிருந்து படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாலும் மலையாளப்படவுலகில் ஊர்வசி அசைக்க முடியாத நாயகியாக வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்.

பாலச்சந்திரமேனனுடன் ‘என்ட அம்மு நின்ட துளசி அவருடெ சக்கி’, மோகன்லாலுடன் பத்தாம் உதயம், மம்முட்டியுடன் நிறக்கூட்டு என தொடக்கமே வலிமையான அடித்தளம் அமைத்தார். பின் வெற்றிப்படங்கள் தாம். தலையணைமந்திரம் படமெல்லாம் இன்றும் கேரளப்பெண்களின் முதல் தேர்வுப்படம்.

சொந்தப்படம் எடுத்து அதில் நாயகனாக தன் இஷ்டநாயகன் மனோஜோடு நடித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். ஊர்வசி மைக்கேல் மதனகாமராஜன் மூலம் தமிழில் இரண்டாவது ரவுண்டு வந்து தான் தான் ஒரு பெண் கமல் நடிப்பில் என நிரூபித்தார். மைக்கேல் மதன காமராஜனின் அந்த திரிபுரசுந்தரி வேறு நடிகையால் நடிக்கவே முடியாதது. மாயாபஜார், எட்டுப்பட்டி ராசா, ‘வனஜா கிரிஜா, மகளிர் மட்டும், நான் பெத்த மகனே.. நான் பெத்த மகனே, இரட்டை ரோஜா ஆகிய படத்தில் தான் என்னவொரு நடிப்பு.

மீண்டும் சிவா மனசுல சக்தி படம் மூலம் ஹீரோக்களின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தவர் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சூரரைப் போற்று, வீட்ல விஷேசம் போன்ற பல நல்ல கதைப்பாங்கான படங்களிலும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.