1995ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் பாட்ஷா. ஸ்டைலு ஸ்டைலுதான்னு ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சகட்டுமேனிக்கு ஸ்டைல் காட்டி நடித்து அசத்தியிருந்தார். ஜோடியாக நடித்தவர் நக்மா. டான்ஸில் பட்டையைக் கிளப்பியிருந்தார்.
1990ல் வெளியான பாஹி என்ற இந்திப் படத்தில் நக்மா அறிமுகமானார். தமிழில் காதலன் படத்தில் அறிமுகம். இந்தப் படத்தை இயக்கியவர் ஷங்கர். படம் வெளியான ஆண்டு 1994. முதல் படத்திலேயே பிரபுதேவாவின் ஜோடியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், பிரபு ஆகியோருடன் ஜோடி சேர்ந்தார்.
ரகசிய போலீஸ் படத்தில் சரத்குமாருடனும், வில்லாதி வில்லன் படத்தில் சத்யராஜ் உடனும், பிஸ்தா, மேட்டுக்குடி படங்களில் கார்த்திக் உடனும், பெரிய தம்பி படத்தில் பிரபுவுடனும் நக்மா ஜோடி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ்ப்படங்களில் மட்டுமல்லாமல் போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். 2001ல் இவர் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமாருடன் சிட்டிசன் படத்தில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்து 2008க்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டார்.
இன்று வரை இவர் திருமணம் செய்யாமலேயே இருந்து விட்டார். ஆனால் அவரது தங்கைகளான ரோஷினி, ஜோதிகா என எல்லோரும் திருமணமாகி செட்டில் ஆகி விட்டனர். ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துள்ளார்.
இப்போது நக்மாவுக்கு வயது 48. சமீபத்தில் அவர் திருமணம் குறித்து இப்படி பேசியுள்ளார். எனக்குத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம் எல்லாம் இல்லை. எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என்று தான் நினைக்கிறேன். திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாக வேண்டும்.
என் திருமணம் விரைவில் நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி என் வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமல்ல… என்று தெரிவித்துள்ளார். இவரது பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க… தமிழில் நடிச்சது 6 படங்கள்.. அதுல 2 ரஜினி கூட.. தென் இந்தியாவையே கலக்கிய கன்னட சூப்பர்ஸ்டார்!
ஆடிப்பட்டம் தேடி விதை போடு, காற்றுள்ள போதே தூற்றிக் கொள், பருவத்தே பயிர் செய் என்று எல்லாம் நம் முன்னோர்கள் அப்போதே தௌ;ளத் தெளிவாகக் கூறிச் சென்று விட்டனர்.
அப்போதுதான் நல்லபடியாக நாம் அறுவடை செய்து அதன் பலனை அனுபவிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். காலம் கடந்த பின் வந்த நக்மாவின் இந்த ஞானோதயத்துக்குப் பலன் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.