மீண்டும் கஜோலுடன் பிரபுதேவா.. 27 ஆண்டுகளுக்குப் பின் சேரும் ஜோடி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

By John A

Published:

கடந்த 1997-ம் ஆண்டு இந்திய சினிமாவின் பல்கலைக்கழகமான ஏ.வி.எம். ஸ்டுடியோவிற்கு பொன்விழா ஆண்டு. இதனைக் கொண்டாடும் வகையில் ஒரு படம் தயார்க்க விரும்பினார்கள். அப்படி இயக்குநம், ஒளிப்பதிவாளருமான ராஜீவ்மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மின்சாரக் கனவு. அப்போது பாலிவுட்டில் பார்த்தவுடனே மின்சாரம் போல் பற்றிக் கொள்ளும் பேரழகியான கஜோலை தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து மின்சாரக் கனவு படத்தில் ஹீரோயினாக்கினார் ராஜீவ் மேனன்.

உடன் அர்விந்த்சாமி, பிரபுதேவா என இரண்டு ஹீரோக்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. எப்போது பார்த்தாலும் அன்று புதிதாய் பூத்த பூப்போல் இன்றும் மின்சாரக் கனவு 27 ஆண்டுகளாக ஜொலிக்கிறது. மின்சாரக் கனவு படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். மேலும் பிரபுதேவா கஜோல் ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதுமட்டுமன்றி பிரபுதேவாவிற்கு தேசியவிருதினைப் பெற்றுக் கொடுத்த பாடலான வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் அமைந்தது.

பகவான் கிருஷ்ணர் என்றாலே ஞாபகத்திற்கு வரும் என்.டி.ராமாராவ்.. 101 வது ஆண்டு பிறந்த தினம்

படமும் 100 நாட்களைக் கடந்து சூப்பர் ஹிட் வெற்றியைக் கொண்டாடியது. இப்படி மின்சாரக் கனவு படத்தின் கஜோல்-பிரபுதேவா ஜோடி எப்படி 27 ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர்களைக் கவர்ந்ததோ தற்போது மீண்டும் இணைய உள்ளனர். கடைசியாக தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்த கஜோல் மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க உள்ளார். வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தின் அளவிற்கு இரண்டாம் பாகம் சற்று சோடை போனது. எனினும் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்சினிமாவில் தலைகாட்டிய கஜோலை இரசிகர்கள் கொண்டாடினர்.

தற்போது மீண்டும் தமிழில் தலைகாட்டும் கஜோல் நடிக்கும் இந்தப் படத்தினை தெலுங்கு இயக்குநர் சரண்தேஷ் உப்பலாப்பட்டி இயக்குகிறார். இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் செட்டிலாகும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் நேரம் செலவிடுவது குறைந்து விடுவதை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. வாத்தி படத்தில் வா..வா.. வாத்தி என தனுஷுடன் டூயட்பாடிய சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த ஜோடியால் மின்சாரக் கனவு வைப் மூடில் இருந்தவர்கள் மீண்டும் இவர்கள் கூட்டணியை திரையில் காண ஆவலாய் உள்ளனர்.